மர்ம தொடர்கள் முதல் சினிமா வரை.. மக்களை கவர்ந்த பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்..

இந்திரா சௌந்தர்ராஜனின் இயற்பெயர் சௌந்தர்ராஜன். 1958-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி சேலத்தில் பார்த்தசாரதி -இந்திரா தம்பதியினருக்குப் பிறந்தார். நாற்பது ஆண்டுகாலமாக மதுரையில் வசிக்கிறார். சேலம் பாரதி வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் நெட்டூர் தொழிற்கல்வி கல்லூரியில் தொழிற்கல்வி பயின்றார். தொலைவழிக் கல்வியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்றார்.

மர்ம தொடர்கள் முதல் சினிமா வரை.. மக்களை கவர்ந்த பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்..

இந்திரா சௌந்தர்ராஜன்

Published: 

10 Nov 2024 15:33 PM

இந்திரா சௌந்தர்ராஜன் பிரபல ஆன்மீக எழுத்தாளர் இன்று காலமானார். இந்திரா சௌந்தர்ராஜன் (வயது 66) தனியார் நாளிதழ், வார இதழ்களில் ஆன்மீக தொடர்கள் எழுதி வந்தவர். ஆன்மீக சொற்பொழிவாளர். 13 நவம்பர் 1958ல் பிறந்தவர். நாளை மறுதினம் அவருக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. புற்றுநோய் காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை 9 மணி அளவில் வீட்டில் கழிவறையில் மயங்கி விழுந்துள்ளார். கழிவறை கதவை உடைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்திரா சௌந்தர்ராஜனின் இயற்பெயர் சௌந்தர்ராஜன். 1958-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி சேலத்தில் பார்த்தசாரதி -இந்திரா தம்பதியினருக்குப் பிறந்தார். நாற்பது ஆண்டுகாலமாக மதுரையில் வசிக்கிறார். சேலம் பாரதி வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் நெட்டூர் தொழிற்கல்வி கல்லூரியில் தொழிற்கல்வி பயின்றார். தொலைவழிக் கல்வியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்றார்.

இந்திரா சௌந்தரராஜனின் மனைவி பெயர் ராதா. மகள்கள் ஐஸ்வர்யா, ஸ்ரீநிதி. டி.வி.எஸ் நிறுவனத்தில் துணைப்பொறியாளராக பணியாற்றினார். பின்னர் தொலைக்காட்சியிலும் திரைப்படத்துறையிலும் பணியாற்றத் தொடங்கினார்.

மர்ம தொடர்கள்:

இந்திரா சௌந்தர்ராஜனின் முதல் படைப்பு 1978-ல் கலைமகள் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வென்ற ‘ஒன்றின் நிறம் இரண்டு’ என்ற குறுநாவலாகும். இந்திரா சௌந்தர்ராஜன் எழுத வந்த காலங்களில் மர்மக்கதைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் அவரும் மர்மக்கதைகள் பல எழுதி அதில் நிறைவில்லாமல் வாழ்க்கை பற்றிய தேடல்கள், கேள்விகள் மூலமாக மூலம் அமானுஷ்ய நாவல்களை எழுத ஆரம்பித்தாக ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார். ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்த ‘கோட்டைபுரத்து வீடு’ என்ற தொடரின் மூலம் பொதுவாசகர்களைக் கவர்ந்த இவர் பின்னர் ‘ஐந்து வழி மூன்று வாசல்’, ‘ரகசியமாய் ஒரு ரகசியம்’ போன்ற தொடர்களை எழுதினார். அமானுஷ்யம், சித்தர்கள் பற்றிய குறிப்புகள், ஆன்மிக மர்மங்கள் போன்றவற்றை களமாகக்கொண்டு கதைகளை எழுதினார்.

Also Read: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை முதல் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

இந்திரா சௌந்தர்ராஜன் ஆன்மிக மேடைச்சொற்பொழிவுகளை ஆற்றி வந்தவர். காஞ்சி சந்திரசேகர சுவாமிகள் பற்றிய உரைகள் புகழ்பெற்றவை. விகடனில் ‘ரகசியமாய் ஒரு ரகசியம்’ என்ற தொடரை ‘மர்மதேசம்’ என்ற பெயரில் தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதினார். பின்னர் அந்த வரிசையில் ‘விடாது கருப்பு’, ‘ருத்ரவீணை’, ‘கிருஷ்ணதாசி’, ‘சிவமயம்’, ‘அதுமட்டும் ரகசியம்’ போன்ற பல தொடர்கள் தொலைக்காட்சியில் வெளிவந்தன.

தொடர்கள் முதல் சினிமா வரை:

இந்திரா சௌந்தர்ராஜனின் முதல் திரைப்படம் ‘சிருங்காரம்’. தேசிய விருது பெற்ற அப்படம் 70 ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் பின்புலத்தில் வாழ்ந்த தேவதாசிகளைப்பற்றிய கதை. அதைத்தொடர்ந்து அனந்தபுரத்து வீடு மற்றும் இருட்டு போன்ற திரைப்படங்கள் வெளிவந்தன.

இவர் பெற்ற விருதுகள்:

இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய என் பெயர் ரெங்கநாயகி என்னும் படைப்பு தமிழ் வளர்ச்சித்துறையின் 1999-ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான மூன்றாம் பரிசினை பெற்றது .சிருங்காரம் என்ற திரைப்படம் 2007- க்கான தேசிய விருது, மைலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விருது மற்றும் தமிழ்ச்சங்கம் விருதுகளைப்பெற்றது. ‘ருத்ரம்’ தொலைக்காட்சித் தொடருக்காக தமிழக அரசின் விருது பெற்றார். இவர் 700 சிறுகதைகள், 340 நாவல்கள் மற்றும் 105 தொடர்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த சாம்சன்..!
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்க செய்ய வேண்டிய விஷயங்கள்..!
நீண்ட நேரம் கழிவறையில் அமர்வதால் ஏற்படும் உடல்நல கேடுகள்..!
ஹல்தி போட்டோஸை வெளியிட்ட ரம்யா பாண்டியன்