சூப்பர் பைக் மோதி சம்பவ இடத்திலே பலியான காவலர்.. அதிர்ச்சி சம்பவம்!

Bike Accident | பைக்கில் அதிவேகமாக செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, 3 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்காக காவலர்கள் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுவர்.

சூப்பர் பைக் மோதி சம்பவ இடத்திலே பலியான காவலர்.. அதிர்ச்சி சம்பவம்!

உயிரிழந்த காவலர் குமரன்

Published: 

04 Aug 2024 16:40 PM

வாகன விபத்தில் காவலர் உயிரிழப்பு : பைக்கில் அதிவேகமாக செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, 3 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்காக காவலர்கள் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுவர். அவ்வாறு சென்னையில் ரோந்து பணிக்கு சென்ற காவலர், விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ரேஸ் பைக்கில் அதிவேகமாக வந்து காவலர் மீது மோதிய இளைஞர்

குமரன் என்பவர் சென்னை போரூர் காவல்நிலையத்தில், காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு  50 வயது ஆகிறது. இவர் சென்னை தாம்பரம் – மதுரவாயல் புறவழிச் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அதிவேகமாக வந்த காவஸாகி நிஞ்சா ரேஸ் பை, வேகமாக வந்து காவலரின் வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குமரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிவேகமாக வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய இளைஞரும் படுகாயமடைந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : IPS Officers: தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. யாரெல்லாம் தெரியுமா?

நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

இந்த விபத்தில் காவலர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சாலை விபத்தில் காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சாலையில் அதிகமாக வாகனம் ஓட்டும் இளைஞர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எங்கெங்கு தெரியுமா?

ஒவ்வொரு தனி நபரும் கட்டாயம் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், மக்களின் நலனுக்காகவும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலருத்து நேர்ந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் பல அப்பாவி உயிர்கள் பரிபோகும் சூழல் நிலவி வருகிறது. பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களின் கடமையை உணர்ந்து வாகனம் ஓட்ட வேண்டும். சாலையில் செல்லும்போது நம்முடைய பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு மற்றவர்களின் பாதுகாப்பும் முக்கியம். எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனம் ஓட்ட வேண்டும் என்றும், சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?