Chennai Powercut : சென்னையில் இந்த பகுதிகளுக்கு நாளை மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா? - Tamil News | power cut will occur in these places of Chennai due to maintenance on September 19 2024 Thursday | TV9 Tamil

Chennai Powercut : சென்னையில் இந்த பகுதிகளுக்கு நாளை மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

Published: 

18 Sep 2024 20:20 PM

Areas | தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது.

Chennai Powercut : சென்னையில் இந்த பகுதிகளுக்கு நாளை மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

மாதிரி புகைப்படம் (Photo Credit : Matthias Bein/picture alliance via Getty Images)

Follow Us On

சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, ரெட்ஹில்ஸ், அத்திப்பட்டு புது நகர் மற்றும் டிஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. எனவே உங்களது பணிகளை அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.  தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

இதையும் படிங்க : One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்.. ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை!

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : BJP Government : 3வது முறையாக ஆட்சி அமைத்த பாஜக கூட்டணி.. 100 நாட்களில் செய்த சாதனைகள் என்ன?

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் செபடம்பர் 19 ஆம் தேதியான நாளை, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ரெட்ஹில்ஸ், அத்திப்பட்டு புது நகர் மற்றும் டிஜி நகர்உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

எந்தெந்த ஏரியா தெரியுமா?

ரெட்ஹில்ஸ்:

ரெட்ஹில்ஸ் பகுதியில் எம்ஜிஆர் நகர், முத்து மாரியம்மன் தெரு, ஆசை தம்பி தெரு, மூவேந்தர் தெரு, சர்ச் தெரு, காமராஜர் நகர், நேதாஜி நகர். சரஸ்வதி நகர், கல்கி நகர், விநாயகபுரம், ஏஜிஎஸ் காலனி, 5,6,7 தெரு, எஸ்கலோம்ஸ் குடியிருப்புகள், டிஆர்ஏ குடியிருப்புகள், சல்மா குடியிருப்புகள், பாலாஜி நகர் 23 முதல் 37வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க : TN Deputy CM : தமிழகத்தின் துணை முதலமைச்சர் யார் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார் – உதயநிதி ஸ்டாலின்!

அத்திப்பட்டு புதுநகர்:

அத்திப்பட்டு புது நகர் பகுதியில் சேப்பாக்கம், மவுத்தமேடு, கே.ஆர்.பாளையம், காட்டுப்பள்ளி, காட்டுப்பள்ளி இண்டஸ்ட்ரியல், தமிழ் குரஞ்சியூர், நந்தியம்பாக்கம், காளாஞ்சி, கரியான்மேடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க : பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது.. நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

டி.ஜி. நகர்:

டிஜி நகர் பகுதியில் சரஸ்வதி நகர் பகுதி, கல்கி நகர், விநாயகபுரம், ஏஜிஎஸ் காலனி, 5,6,7 தெரு, எஸ்கலோம்ஸ் குடியிருப்புகள், டிஆர்ஏ குடியிருப்புகள், சல்மா குடியிருப்புகள், பாலாஜி நகர் 23 முதல் 37வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version