5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Powercut : சென்னையில் இந்த பகுதிகளுக்கு நாளை மின்தடை.. எந்த எந்த பகுதிகள் தெரியுமா?

Powercut Areas | சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி சிட்கோ - திருமுல்லைவாயல், பெரியார் நகர் மற்றும் தில்லை கங்கை நகர்ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாதனங்கள் பயன்படுத்த முடியாது.

Chennai Powercut : சென்னையில் இந்த பகுதிகளுக்கு நாளை மின்தடை.. எந்த எந்த பகுதிகள் தெரியுமா?
கோப்பு புகைப்படம் (pic courtesy: pixabay)
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 29 Sep 2024 20:50 PM

சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஜே.ஜே.நகர், கும்மிடிப்பூண்டி சிப்காட்-III,அனகாபுதூர், எண்ணூர், மாத்தூர் மற்றும் சேலையூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாதனங்கள் பயன்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது.

இதையும் படிங்க : Evening Digest 29 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

மின்தடை:

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : October Changes : கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை.. அக்டோபர் மாதம் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் செபடம்பர் 30 ஆம் தேதியான நாளை, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி,  ஜே.ஜே.நகர், கும்மிடிப்பூண்டி சிப்காட்-III,அனகாபுதூர், எண்ணூர், மாத்தூர் மற்றும் சேலையூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

எந்தெந்த பகுதிகள்?

ஜே.ஜே.நகர்:

முகப்பேர் எரி திட்டம், கங்கையம்மன் நகர், முகப்பேர் கிழக்கு (1 முதல் 12 தொகுதிகள்), கலெக்டர் நகர், பாடிக்குப்பம், ரயில் நகர், கோல்டன் ஜார்ஜ் நகர், முகப்பேர் மேற்கு, க்ருச் சாலை, வேணுகோபால் தெரு, சீயோன் தெரு, பஜனை கோயில் தெரு.

கும்மிடிப்பூண்டி சிப்காட்-III:

GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், SP பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, NR கண்டிகை, & GR கண்டிகை.

அனகாபுதூர்:

பம்மல் மெயின் ரோடு, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜிநகர் 1வது மற்றும் 2வது குறுக்குத் தெரு, பசும்பொன் நகர், பாலாஜி நகர் 30 அடி சாலை, பாலாஜி நகர் 12வது குறுக்குத் தெரு, திருநகர், லட்சுமி நகர், எல்.ஆர்.ராஜமாணிக்கம் சாலை, தவதாஸ் நகர், ராகவேந்திரா சாலை.

எண்ணூர்:

கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன் படை வீதி, வள்ளுவர் நகர், காமராஜ் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், உலகநாதபுரம், முகத்துவார குப்பம், எண்ணூர் குப்பம், தாழங் குப்பம், பெரிய குப்பம், நெட்டுக்குப்பம். குப்பம் எர்ணாவூர் குப்பம், இடிபிஎஸ் குவார்ட்டர்ஸ், எர்ணாவூர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், ஜெய்ஹிந்த் நகர், முருகப்பா நகர், ராமநாதபுரம், லோதி நகர், சண்முகபுரம், சரஸ்வதி நகர், சக்தி கணபதி நகர், மதுரா நகர், சுப்ரமணிய நகர், பொன்னியம்மன் நகர்.

இதையும் படிங்க : TN Cabinet Reshuffle : தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோவி செழியன் வரை.. யார் யாருக்கு என்ன துறை!

மாத்தூர்:

மாத்தூர் எம்எம்டிஏ (முழு பகுதி), பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்சிஜி அவென்யூ, சின்ன சாமி நகர், காமராஜர் சாலை, காமராஜ் சாலை-மஞ்சம்பாக்கம் அனைத்து தெரு, அசிஸ் நகர் அனைத்து தெரு, அகர்சன் கல்லூரி சாலை, மேற்குத் தோட்டம், காத்தாக்குழி, திதிர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமரராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர் , கொசப்பூர் பகுதி, தீயப்பாக்கம் முழு, சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம் பகுதி, வடபெரும்பாக்கம் தொழில் பூங்கா, பார்வதிபுரம், ஸ்ரீனிவாசா மாடர்ன் டவுன் மற்றும் கன்னி அம்மன் நகர்.

சேலையூர்:

ALS நகர் பகுதி, ரமணா நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, வடக்குப் பகுதி, வடக்கு மட, கிழக்கு மட & மேற்கு மட வீதிகள், மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர் பகுதி, அகரம் பிரதான சாலைப் பகுதி, வேதாச்சலம் நகர், SR காலனி, IAF சாலை, ரிக்கி கார்டன், ஹரணி அபார்ட்மெண்ட் மற்றும் சுமேரி நகரம்.

Latest News