Sabarimala: சபரிமலை பக்தர்கள் உஷார்.. மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்த போலீசார்!
ஆங்கில மாதத்தை குறிப்பிட்டால் நவம்பர் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை நடுவில் ஒரு சில நாட்களை தவிர்த்து 48 நாட்கள் பக்தர்கள் கூட்டத்தால் சபரிமலையே திண்டாடும். விரதம் இருந்து இருமுடிக்கட்டி சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பில் கேரள மாநில அரசு மற்றும் தேவசம் போர்டு ஆகியவை அடுத்ததடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் இலவச காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை காப்பீடு திட்ட மோசடி: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ரூபாய் 5 லட்சம் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என கேரளா தேவசம்போர்டு அறிவித்த நிலையில் புதுச்சேரி போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். உலகளவில் பிரசித்திப் பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஓவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதேசமயம் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனம் ஆகிய நிகழ்வுகளுக்காக கார்த்திகை, மார்கழி மாதங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதும்.
ஆங்கில மாதத்தை குறிப்பிட்டால் நவம்பர் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை நடுவில் ஒரு சில நாட்களை தவிர்த்து 48 நாட்கள் பக்தர்கள் கூட்டத்தால் சபரிமலையே திண்டாடும். விரதம் இருந்து இருமுடிக்கட்டி சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பில் கேரள மாநில அரசு மற்றும் தேவசம் போர்டு ஆகியவை அடுத்ததடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே நடப்பாண்டு முதல் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் இலவச காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். தரிசனம் செய்யும் பக்தர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு இந்த பணத்தை திருவாங்கூர் தேவசம் போர்டு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பக்தர்கள் அதிர்ச்சியடையும் வகையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சபரிமலை பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தை சிலர் மோசடி செய்யும் நோக்கத்தில் பயன்படுத்திக் கொள்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சபரிமலை பயணத்திற்கு என அறிவிக்கப்பட்ட பக்தர்களுக்கான இலவச அரசு காப்பீடு திட்டத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சமூக வலைதளங்கள் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் மோசடி செய்பவர்கள் பக்தர்களை அணுகுவதாக காவல்துறைக்கு புகார் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செயல்முறை கட்டணம், ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் ஆகியவை இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக செலுத்தப்பட வேண்டும் என அவர்கள் தெரிவிப்பதாகவும், பணத்தை மாற்றம் செய்வதற்காக பக்தர்களை மூளைச்சலவை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் கட்டணம் அல்லது காப்பீடு திட்டம் தொடர்பான தகவல்கள் எதுவும் உண்மையில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.கேரள அரசின் கோரிக்கையை தொடர்ந்து மேலும் மோசடி நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு இந்த எச்சரிக்கையானது விடப்படுவதாக பொதுமக்களுக்கு புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்கும் வங்கி மோசடிகள்
இதேபோல் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் குறிவைத்து தொடர்ச்சியாக பண மோசடிகள் அதிகரித்துளையும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. வங்கி அதிகாரிகள் போல் காட்டிக்கொண்டு மோசடி பேர்வழிகள் முதியோர்களை தொடர்புகொண்டு வங்கி கணக்கு விவரங்கள், பணப்பரிவர்த்தனைகள் போன்றவை தொடங்கி பென்ஷன் விவரங்கள் வரை அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டு அப்டேட் செய்யும்படி கூறுகிறார்கள்.
பின்னர் செல்போனுக்கு வரும் ஓடிடி எண் போன்ற விவரங்களை கேட்டு சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி விடுகிறார்கள். இதுவரை 50க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. ஆனால் வங்கிகள் அத்தகைய வாடிக்கையாளரின் தகவல்களை கேட்பதில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் போலி வேலை வாய்ப்புகள், அதிக வருமானம் தரும் முதலீடு திட்டங்கள் போன்ற இணைய மோசடிகளுக்கு எதிராக காவல்துறை தொடர்ச்சியாக பொதுமக்களை எச்சரித்து வருகின்றன. தொடர்ச்சியாக புகார்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற சைபர் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது 9489205246 அல்லது 0413-2276144 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.