5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave: கனமழை எதிரொலி.. புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இப்படியான நிலையில் சென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை பெய்தது. சென்னை அண்ணாசாலை, ராயப்பேட்டை, தி.நகர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவியது.

School Leave: கனமழை எதிரொலி.. புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 19 Oct 2024 08:12 AM

கனமழை: கனமழை காரணமாக  புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று (அக்டோபர் 19) விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இப்படியான நிலையில் சென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை பெய்தது. சென்னை அண்ணாசாலை, ராயப்பேட்டை, தி.நகர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

Also Read: Exercise: ஜிம்மிற்கு செல்லாமல் தொப்பையை குறைக்க வேண்டுமா..? இந்த உடற்பயிற்சியை வீட்டிலேயே செய்யுங்கள்!

இந்நிலையில் இதனிடையே இன்று (அக்டோபர் 19) காலை 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கடலூர், தர்மபுரி, சேலம், மயிலாடுதுறை தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Viral Fever: காய்ச்சல் இருக்கும்போது குளிக்கலாமா..? வேண்டாமா..? இது வெப்பநிலையை அதிகரிக்குமா?

இதனிடையே மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

நாளை (அக்டோபர் 20) திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 21 ஆம் தேதிக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Latest News