தனியாக நின்ற கார்.. உள்ளே 5 பேரின் சடலம்.. கடன் பிரச்சனையால் நடந்த கொடூரம்..
கடன் பிரச்சனை யாரை விட்டது. இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் கடன் வாங்கியுள்ளனர். வீட்டுக் கடன், கார் கடன், வீட்டு செலவுக்காக கடன் என எதாவது ஒரு வகையில் கடன் வாங்கி விடுகிறோம். பலரும் அதனை முறையாக செலுத்தி வந்தாலும் ஒரு சிலர் கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிக்கலில் மாட்டுகின்றனர். அப்படி ஒரு தவனை செலுத்த தவறினால் அதற்கு வட்டி போட்டு அது மேலும் சுமையாக மாறுகிறது.
திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே சேலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து திருமயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மணிகண்டன் (54), அவரது மனைவி நித்யா (48), இவர்களது மகன் தீரன் (22), மகள் நிகாரிகா (21), மணிகண்டனின் தாய் சரோஜா (70) ஆகியோர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே இளங்குடிபட்டி என்ற பகுதியில் காரை நிறுத்திவிட்டு 5 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடன் பிரச்சனை யாரை விட்டது. இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் கடன் வாங்கியுள்ளனர். வீட்டுக் கடன், கார் கடன், வீட்டு செலவுக்காக கடன் என எதாவது ஒரு வகையில் கடன் வாங்கி விடுகிறோம். பலரும் அதனை முறையாக செலுத்தி வந்தாலும் ஒரு சிலர் கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிக்கலில் மாட்டுகின்றனர். அப்படி ஒரு தவனை செலுத்த தவறினால் அதற்கு வட்டி போட்டு அது மேலும் சுமையாக மாறுகிறது.
மேலும் படிக்க: தமிழில் எழுத படிக்க தெரியுமா? அரசு வேலை.. மிஸ் பண்ணாதீங்க… உடனே அப்ளை பண்ணுங்க!
அந்த வகையில் சேலத்தை சேர்ந்த சொழிலதிபரையும் விட்டு வைக்கவில்லை இந்த கடன் பிரச்சனை. புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் அருகே இளங்குடிபட்டியில் சாலையோரம் ஒரு கார் நீண்ட நேரமாக நின்றிருந்தது. அதன் அருகிலும் யாரும் இல்லாத நிலையில், இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வருகை தந்து அந்த காரை பார்த்துள்ளனர். ஆனால அவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரை திறந்து பார்த்ததில் 5 சடலங்கள் இருந்துள்ளது. அதாவது காருக்குள் 5 பேர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். உடனடியாக உடல்களை மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
Also Read: மழைக்கு ரெடியா? அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். பிரேத பரிசோதனையில் சேலத்தை சேர்ந்த சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மணிகண்டன் (54), அவரது மனைவி நித்யா (48), இவர்களது மகன் தீரன் (22), மகள் நிகாரிகா (21), மணிகண்டனின் தாய் சரோஜா (70) என்பது தெரியவந்தது. அவர்கள் 5 பேரும் விஷம் குடித்து இறந்து போனது தெரியவந்துள்ளது.
மேலும், அந்த காரில் ஒரு கடிதமும் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அவர்கள் கடிதம் எழுதி வைத்து விட்டு இந்த விபரீத முடிவு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.