திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்!
Radhika Sarathkumar: புகார் மனுவில், தனது குடும்பம் பற்றியும் தனது கணவர் பற்றியும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிகவும் இழிவாக பேசியதாகவும் எந்தவொரு காரணமும் இன்று பொதுவெளியில் அவதூறு செய்திகளை மக்களிடையே பரப்பி அதன்மூலம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விளம்பரம் தேடுகிறார் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேன்ற கழகத்தில் உறுப்பினராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடை பேச்சுக்களில் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டவர். அவர் பேசும் பல கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தன. இவர் பொது மேடைகளில் எதிர்கட்சியை சேர்ந்த பலரையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து கண்டனத்தை பெற்று வருபவராக இருக்கிறார். முக்கியமாக எதிர்க்கட்சிகளில் இருக்கும் தலைவர்கள், அதிலும் பெண் தலைவர்கள் பற்றி மிக மோசமான கருத்துக்களை, ஆபாசமான கருத்துக்களை இவர் தொடர்ச்சியாக பேசி வந்தார். சமீபத்தில் பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான நடிகை குஷ்பு மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி போன்றோர்களை பற்றி அவதூறாக பேசிய குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டார். பின்னர் விளக்கம் கொடுத்து, மன்னிப்பு கேட்ட பின் சில நாட்கள் கழித்து கட்சியில் சேர்க்கப்பட்டார்.
சமீபத்தில் தி.மு.க. நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ராதிகா சரத்குமார் குறித்து அவதூறாக பேசியது இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது. இதற்கு நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் குஷ்பு தங்களது எக்ஸ் தளத்தில் கண்டனத்தை தெரிவித்தனர்.
ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே…அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., shame on #dmk @mkstalin… https://t.co/0iB47olxzX
— Radikaa Sarathkumar (@realradikaa) May 13, 2024
இந்த நிலையில், அவதூறாக பேசிய விவகாரத்தில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் அவரது மேலாளர் நடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், தனது குடும்பம் பற்றியும் தனது கணவர் பற்றியும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிகவும் இழிவாக பேசியதாகவும் எந்தவொரு காரணமும் இன்று பொதுவெளியில் அவதூறு செய்திகளை மக்களிடையே பரப்பி அதன்மூலம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விளம்பரம் தேடுகிறார் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.