5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rajinikanth Speech: திமுக விழாவில் ரஜினி கல கல பேச்சு.. குலுங்கி குலுங்கி சிரித்த மொத்த அரங்கம்..

பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நூலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். விழாவில் துரைமுருகன், உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Rajinikanth Speech: திமுக விழாவில் ரஜினி கல கல பேச்சு.. குலுங்கி குலுங்கி சிரித்த மொத்த அரங்கம்..
நடிகர் ரஜினிகாந்த்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Aug 2024 09:54 AM

ரஜினி கல கல பேச்சு: பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நூலை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். விழாவில் துரைமுருகன், உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் தொல். திருமாவளவன், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், “முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது வாழ்வில் சந்தித்த சோதனைகள், விமர்சனங்களை வேறு யாராவது சந்தித்திருந்தால் காணாமல் போய் இருப்பார்கள். 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சியைக் காப்பாற்றினார். இப்போது ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டால் திண்டாடுகிறார்கள். கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததற்கு அவருடைய ஆளுமை, உழைப்புதான் காரணம். இந்த வெற்றிகளே அவரது அரசியல் ஞானத்தை சொல்லும்.

Also Read: சென்னையில் திடீர் மாற்றம்.. இந்தெந்த ரூட்டெல்லாம் மாறுது.. வெளியான முக்கிய அறிவிப்பு!

துரைமுருகன் குறித்து பேசிய ரஜினி:

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்ந்தால் பிரச்னையே இல்லை. அந்த பள்ளியில் ஏற்கனவே இருக்கக் கூடிய பழைய மாணவர்களைச் சமாளிப்பது சாதாரண விஷயமல்ல. இங்கே (திமுக) ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பெயில் ஆகிப் போனவர்கள் அல்ல. ரேங்க் வாங்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள். அசாத்தியமான அவர்களை சமாளிப்பது எளிதல்ல. அதுவும் துரைமுருகன் போன்றோரை சமாளிப்பது பெரிய விஷயம்.

துரைமுருகன் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரிடம் எதாவது ஒரு விஷயத்தை சொன்னால் அதற்கு அப்படியா! ரொம்ப சந்தோஷம் என்று துரைமுருகன் பதில் அளிப்பார். அவர் நன்றாக இருக்கிறது சந்தோஷம் என்று சொல்கிறாரா? அல்லது நன்றாக இல்லை என்பதற்காக சந்தேஷம் என்று சொல்கிறாரா என்பதை புரிந்து கொள்ள முடியாது. இந்த சூழலில் சிறப்பாக செயலாற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஹேட்ஸ் ஆப்” என்றார். ரஜினியின் இந்த பேச்சுக்கு அரங்கத்தில் இருநத அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். முதலமைச்சர் ஸ்டாலினும் நன்றாக சிரித்து கொண்டே கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறினார்.

Also Read: இன்று முதல் மீண்டும் 21 மின்சார ரயில்கள் ரத்து.. எத்தனை நாட்களுக்கு? எந்த வழித்தடத்தில் ?

ரஜினிக்கு முதல்வர் பதில்:

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “புத்தக வெளியீட்டு விழாவுக்கு முத்தாய்ப்பு வைத்தது போன்று மனந்திற்நது என்னை ஊக்கப்படுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த பேசினார். அவர் கூறிய அனைத்தையும் நான் புரிந்து கொண்டேன். அவர் பயப்பட வேண்டாம். எதிலும் நான் தவறிட மாட்டேன். அனைத்திலும் உஷாராக இருப்பேன் என்ற உறுதியை அவருக்கு தெரிவிக்கிறேன்” என்றார். நடிகர் ரஜினிகாந்த் பேச்சும், அதற்கு முதல்வர் ஸ்டாலினின் பதிலும் புத்தக வெளியீட்டு விழா மேடையை கலகலப்பாக்கியது.

Latest News