Ramanathapuram Election Results 2024 : நவாஸ் கனி வெற்றி.. ராமநாதபுரம் தொகுதி மக்களவை தேர்தல் 2024 முடிவுகள்
ராமநாதபுரம் தொகுதி தேர்தல் முடிவுகள்: தென் தமிழகத்தில் அமைந்துள்ள ராமநாதபுரம் தொகுதி இந்த முறை தேசிய அளவில் பேசு பொருளாக மாறியது. அதற்கு முக்கியமான காரணம் இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியே இந்த தொகுதியில் போட்டியிடுவார் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் கடந்த முறை போன்று இந்த முறையும் அவர் வாரணாசி தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறார். பிரதமர் போட்டியிடவில்லை என்றாலும் இந்த முறை ராமநாதபுரம் தொகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக மாறி உள்ளது.
நவாஸ் கனி வெற்றி: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியைச் சேர்ந்த நவாஸ் கனி வெற்றிபெற்றுள்ளார். அவர் 497295 வாக்குகள் பெற்று இதனை சாதகமாக்கியுள்ளார். அவருக்கு போட்டியாள களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம் 351557 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றார். தென் தமிழகத்தில் அமைந்துள்ள ராமநாதபுரம் தொகுதி இந்த முறை தேசிய அளவில் பேசு பொருளாக மாறியது. அதற்கு முக்கியமான காரணம் இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியே இந்த தொகுதியில் போட்டியிடுவார் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் கடந்த முறை போன்று இந்த முறையும் அவர் வாரணாசி தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறார். பிரதமர் போட்டியிடவில்லை என்றாலும் இந்த முறை ராமநாதபுரம் தொகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக மாறி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்த தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணி சார்பாக ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியை பொருத்தவரையில் முக்குலத்தோர் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அதேபோல இஸ்லாமியர்களுக்கும் இங்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இவர்களைத் தவிர தலிச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடிய இடத்தில் உள்ளனர்.
2024 தேர்தல் நிலவரம்:
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியைச் சேர்ந்த நவாஸ் கனி போட்டியிட்டார். பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வரம் ஒரு சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள் களத்தில் இருந்தார். இவர் சமீபத்தில் திமுக இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர். கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக இருந்ததால் இஸ்லாமியர்கள் வாக்குகள் நவாஸ் கனிக்கு கிடைத்தது. ஆனால், இந்த முறை அதிமுக தனித்து களம் காண்கிறதாலும், எஸ்டிபிஐ கட்சி இருப்பதாலும் வாக்குகள் பிரிவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மேலும், முன்னாள் முதல்வர் என்ற அனுதாபத்தில் அவருக்கு ஒரு சில வாக்குகள் செல்ல வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டது. ஆனாலும் நவாஸ் வெற்றி வாகை சூடியுள்ளார்
வாக்காளர்களின் எண்ணிக்கை:
ராமநாதபுரத்தில் மொத்த வாக்காளர்கள் 16 லட்சத்து 6 ஆயிரத்து 046 பேர் உள்ளனர்.
- பெண் வாக்காளர்கள் – 8,08,955
- ஆண் வாக்காளர்கள் – 7,97,012
- மூன்றாம் பாலினத்தவர் – 79
சட்டப்பேரவை தொகுதிகள்:
கடந்த 1951ஆம் ஆண்டு முதல் ராமநாதபுரத்தில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின், ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருவாடனை, அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த காலங்களில் தேசிய கட்சியான காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வந்தது. 1951ஆம் ஆண்டு தொடங்கி மூன்று முறையும், இதையடுத்து 1984ஆம் ஆண்டு தொடங்கி நடந்த மூன்று தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி பெற்று அசத்தினர். ஆனால், சமீப காலமாக ராமநாதபுரம் தொகுதியை மாநில கட்சிகளின் வசம் வந்துவிட்டது.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியைச் சேர்ந்த நவாஸ் கனி 4 லட்சத்து 69 ஆயிரத்து 943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூடடணியில் இருந்த பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 3 லட்சத்து 42 ஆயிரத்து 821 வாக்குகள் பெற்றார். 1.20 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நவாஸ் கனி வெற்றி பெற்றார். கடந்த 2014 தேர்தலில் அதிமுகவின் அன்வர் ராஜா 4 லட்சத்து 5 ஆயிரத்து 945 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் முகமது ஜலீல் 2 லட்சத்து 86 ஆயிரத்து 621 வாக்குகள் பெற்றார். சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்வர் ராஜா வெற்றி பெற்றார்.