5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அரசியலில் விஜய்யுடன் கைகோக்கும் நாம் தமிழர்.? அண்ணன் – தம்பி உறவு என விளக்கம் சொன்ன சீமான்!

அடுத்த மாதம் 22ஆம் தேதி தனது பிறந்தநாளையொட்டி, மதுரையில் தனது கட்சி சார்பில் முதல் பிரம்மாணடமான மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், இம்மாநாட்டில் கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இம்மாநாட்டை திமுக, அதிமுக கட்சிகளுக்கு இணையாக பிரம்மாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படியான நிலையில் தான், விஜய்யுடன் கைகோர்க்க சீமான் தயார் என்று தெரிவித்திருக்கிறார்.

அரசியலில் விஜய்யுடன் கைகோக்கும் நாம் தமிழர்.? அண்ணன் – தம்பி உறவு என விளக்கம் சொன்ன சீமான்!
சீமான் – விஜய்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 Oct 2024 12:31 PM

விஜய்யுடன் கூட்டணிக்கு தயார்: மே 18 இனப்படுகொலை நாளையொட்டி, சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யுடன் பயணிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சீமான், ”நாட்டில் என்ன பிரச்னை? நானும் விஜய்யும் சேர்ந்து விடக்கூடாது என்பதுதானே? நாங்கள் இருவரும் சேர வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகிறார்களா? நான் விஜய் பாணியிலேயே சொல்கிறேன். நானும் என் தம்பியும் (விஜய்) ஒன்று சேர்வதற்கு காத்திருக்கிறேன். நானும், விஜய்யும் கள்ளக்காதலா செய்கிறோம்? அண்ணனும், தம்பியும் சந்திப்பது வழக்கம் தான். அப்படி தான் எங்கள் சந்திப்பு இருக்கும். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு வந்தால் நான் பங்கேற்பேன்” என்றார்.

Also Read : Tamil Nadu Weather : 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. வெளுக்கப்போகும் கனமழை.. எங்கெங்கு தெரியுமா?

தமிழக வெற்றிக் கழகம்:

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்து இருந்தார்.

மேலும், தேர்தல் ஆணையத்திலும் தனது கட்சியை பதிவு செய்துள்ள விஜய் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனக்கு இலக்கு என்றும், இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் இடைப்பட்ட இந்த இரண்டு வருடங்களில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடப்போவதாகவும், இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்.

இதற்கிடையில், அடுத்த மாதம் 22ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் விஜய். இதனையொட்டி, மதுரையில் தனது கட்சி சார்பில் முதல் பிரம்மாணடமான மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் இம்மாநாட்டில் கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இம்மாநாட்டை திமுக, அதிமுக கட்சிகளுக்கு இணையாக பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படியான நிலையில் தான், விஜய்யுடன் கைகோர்க்க சீமான் தயார் என்று தெரிவித்திருக்கிறார்.

Also Read : தள்ளாடும் வயதில் ஜனநாயக கடமையாற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.. வாவ்!

Latest News