Chennai Rains: சென்னைக்கு ரெட் அலர்ட்.. ஒரே நாளில் 25 செ.மீ வரை மழை கொட்டப்போகுது… உஷார் மக்களே! - Tamil News | red alert for chennai tiruvallur kanchipuram chengalpattu says imd reports tamil | TV9 Tamil

Chennai Rains: சென்னைக்கு ரெட் அலர்ட்.. ஒரே நாளில் 25 செ.மீ வரை மழை கொட்டப்போகுது… உஷார் மக்களே!

Updated On: 

13 Oct 2024 18:32 PM

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 14, 15, 16ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் 3 நாட்களில் 470 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் 47 செ.மீ வரை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு லேசான மழை தொடங்கி, நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கலாம். நாளை மாலை மழை முதல் தீவிரம் அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

1 / 5இந்தியாவில்

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 4 மாதங்களாக பெய்து வந்தது. அது செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிந்து விட்டது. இருந்தாலும் தென் மேற்குப் பருவக்காற்றின் தாக்கம் இன்னும் ஒருசில இடங்களில் நீடிக்கிறது. இந்த தாக்கல் இன்னும ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். அடுத்து வடகிழக்கு பருவமழை தான். இந்த வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி வாக்கில் தொடங்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2 / 5

இப்படியான சூழலில், சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3 / 5

இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 14, 15, 16ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்து ஆண்டு மிக்ஜாம் புயல் சென்னை புரட்டி எடுத்துவிட்டது. ஆனால், தற்போது எந்த ஒரு புயல் எச்சரிக்கை கொடுக்கவில்லை. இருப்பினும், இந்த மூன்று நாட்களுக்கு சென்னையில் மழை வெளுத்து வாங்கப்போகும் என்று கூறப்பட்டுள்ளது.

4 / 5

அது எந்தளவுக்கு என்றால், சென்னையில் 3 நாட்களில் 470 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, பொதுவாக சென்னையில் 24 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்தால் வெள்ளம் ஏற்படும். இப்போது மூன்று நாட்களில் 47 செ.மீ வரை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு லேசான மழை தொடங்கி, நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கலாம். நாளை மாலை மழை முதல் தீவிரம் அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

5 / 5

அதன்படி, நாளை 4.5 செ.மீ, நாளை மறுநாள் 26.5 செ.மீ, செப்டம்பர் 16ஆம் தேதி 15.5 செ.மீ மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாமல் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!