Chennai: கிண்டி மருத்துவமனையில் இளைஞர் மரணம்.. உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

Guindy Hospital: சென்னை பெரும்பாக்கம் பகுதியில் சேர்ந்தவர் விக்னேஷ்.31 வயதான இவர் வயிற்றுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார்.

Chennai: கிண்டி மருத்துவமனையில் இளைஞர் மரணம்.. உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

உயிரிழந்த விக்னேஷ்

Updated On: 

15 Nov 2024 11:20 AM

சென்னை:  சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அங்கு சிகிச்சைப் பெற்று வந்த விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பெரும்பாக்கம் பகுதியில் சேர்ந்தவர் விக்னேஷ்.31 வயதான இவர் வயிற்றுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார்.

இதனிடையே அவரது உயிரிழப்புக்கு மருத்துவர்கள் தான் காரணம் என்றும், போதிய மருத்துவர்கள் பணியில் இல்லை என்றும் குற்றம் சாட்டி விக்னேஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விக்னேஷூக்கு உய்ரிய இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் வந்து விக்னேஷ் குடும்பத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  முதற்கட்ட விசாரணையில் விக்னேஷுக்கு வயிற்றில் பித்தப்பை கல் பிரச்சனை இருந்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்த நிலையில், மேலும் அங்கு சிகிச்சை பெற முடியாமல் அவர் கிண்டி அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்ததாக சொல்லப்படுகிறது.இதனையடுத்து உரிய விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்ட நிலையில் இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

விக்னேஷுக்கு முறையான சிகிச்சை அனைத்தும் கொடுக்கப்பட்டதாக கிண்டி அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடர முடியாத நிலையில் நோய் தீவிரத்துடன் தான் அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரை அழைத்து வந்த போது உள் நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இருந்தனர். அதே சமயம் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கை சுவாச கருவிகளுடன் சிகிச்சை தரப்பட்ட நிலையில் தான் விக்னேஷ் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கிண்டி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு

சென்னை கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய்த்துறை தலைவராக மருத்துவர் பாலாஜி என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் இவரது அறைக்கு வந்த விக்னேஷ் என்ற இளைஞர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்தினார். புற்றுநோய்க்காக சிகிச்சைக்கு வந்த தனது தாயாருக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்றும், இவரால் தாயின் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதாகவும் கூறி இந்த தாக்குதல் சமூகத்தை நடத்தியதாக விக்னேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இதய நோயாளி என்பதால் அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.

தற்போது உடல்நலம் தேறியுள்ள மருத்துவர் பாலாஜி இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி கண்காணிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. உடனடியாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் நாம் போராட்டத்தில் இறங்கினர். அவர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் மாசுபிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவு கொண்டு வந்தார்.

இனி தொடர்ந்து நேற்று அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே சமயம் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை வரை வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட விக்னேஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?