5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Vijay: மொத்தம் 26 தீர்மானங்கள்.. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு.. த.வெ.க கூட்டத்தில் விஜய் அதிரடி!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் எதிர்ப்பு முதல் மதுக்கடை, மின்சார கட்டணம் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

TVK Vijay: மொத்தம் 26 தீர்மானங்கள்.. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு.. த.வெ.க கூட்டத்தில் விஜய் அதிரடி!
விஜய் (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Nov 2024 15:28 PM

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.  அண்மையில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில் கொள்கைகள், கோட்பாடுகள் குறித்து விஜய் தெளிவுப்படுத்தினார். மேலும், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டம்

அதாவது, பிரிவினைவாத அரசியல் மற்றும் குடும்ப அரசியல் கட்சி திமுக, பாஜகவை மறைமுகமாக சாடியிருந்தார். மேலும், கூட்டணிக்கு அழைத்து விடுத்த அவர், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு உண்டு என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இதை தொடர்ந்து அடுத்த கட்டமாக, கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். 2026 தேர்தலை கருத்தில் கொண்டு தனது ஒவ்வொரு நகர்வையும் விஜய் எடுத்து வருகிறார். அதன்படி, அடுத்தகட்ட பணிகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் உட்பட குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இறுதியில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார்.

Also Read : கன்னியாகுமரி மாவட்டத்தில் பதிவான 16 செ.மீ மழை.. இன்றும் கனமழை தொடரும்..

த.வெ.க செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள்

மாநாட்டிற்கு பிறகு பொதுக்கூட்டங்கள், சுற்றுப்பயணங்கள் நடத்தப்படும் என்று ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அது குறித்தும் ஆலோசனை நடத்தப்படதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.  இந்த நிலையில் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இக்கூட்டத்தில் சுமார் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, முதலாவதாக கழக மாநாட்டிற்கு வரும்போது உயிர் இழந்த நபர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் எதிர்ப்பு முதல் மின்சார கட்டணம் வரை

மேலும், தமிழ் மொழி சார்ந்த விஷயங்களில் தலையிட மத்திய அரசுககோ, மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கோ உரிமையில்லை. மத்திய அரசு கொண்டு வர உள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுக்கடைகளை கைவிட்டு அரசின் வருவாய்க்கு வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மும்மொழி கொள்கையை திணிக்கும் முயற்சியில் நிறைவேறாது. மொழி கொள்கையில் மத்திய அரசுக்கு தலையிட உரிமையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றுகிறது என்றும் மாதத்தோறும் மின் கட்டணம் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Also Read : த.வெ.க மாநாட்டிற்கு பின் நடக்கும் முதல் ஆலோசனை கூட்டம்.. தலைமை அலுவலகத்திற்கு வந்த தலைவர் விஜய்..

2026 தேர்தலுக்கு ஸ்கெட்ச் போடும் விஜய்

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை நோக்கி ஒவ்வொரு நடவடிக்கையும் எடுத்து வருகிறார் விஜய். குறிப்பாக, இவர்  கூட்டணி வைப்பாரா அல்லது தனித்து போட்டியிடுவாரா என்ற  எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. விஜய் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியான சமயத்தில் இருந்தே, அவர் சீமானுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டன. ஆனால், கட்சி தொடங்கி கொள்கையை சொன்னதில் இருந்து விஜயை சீமான் விமர்சனம் செய்தி வருகிறார்.

அதேபோல, விஜயின் அரசியல் வருகை தொடர்பான செய்திகள் வெளியான சமயத்தில் இருந்தே, அவருடன் இணக்கமான போக்கையே விசிக தலைவர் திருமாவளவன் பேணி வந்தார். ஆனால், பாசிசம் தொடர்பான விஜயின் கருத்தை மேற்கோள் காட்டி அவரை திருமா விமர்சிக்க தொடங்கி உள்ளார். இதனால் இவர் யாருடன் கூட்டணி வைப்பார்,  அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

Latest News