Trichy : கோயில் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்.. திருச்சியில் பரபரப்பு! - Tamil News | Rocket launcher found in Trichy Sivan temple pond | TV9 Tamil

Trichy : கோயில் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்.. திருச்சியில் பரபரப்பு!

Rocket Launcher | திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் பகுதியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் செயல்பட்டு வருகிறது. இந்த சிவன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது பண்டிகை காலம் என்பதால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோயிலில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

Trichy : கோயில் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்.. திருச்சியில் பரபரப்பு!

ராக்கெட் லாஞ்சர்

Published: 

30 Oct 2024 21:36 PM

திருச்சியில், சிவன் கோயிலின் அருகில் உள்ள குளத்தில் ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராக்கெட் லாஞ்சரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கோயில் குளத்தின் அருகே ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Evening Digest 30 October 2024 : தீபாவளியை முன்னிட்டு இன்று இரவு சிறப்பு ரயில்கள் இயக்கம்.. இன்றைய டாப் 10 செய்திகள்!

சிவன் கோயில் குளத்தில் கிடந்த ராக்கெட் லாஞ்சர்

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் பகுதியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் செயல்பட்டு வருகிறது. இந்த சிவன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது பண்டிகை காலம் என்பதால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோயிலில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இந்த கோயிலை ஒட்டி குளம் அமைக்கப்பட்டுள்ளதால், கோயிலுக்கு சென்ற பக்தர்கள் குளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது குளத்தில் பெரிய பட்டாசு போல ஏதோ ஒரு பொருள் இருப்பதை பொதுமக்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையும் படிங்க : Kolkata : சிகிச்சைக்கு வந்த பெண்.. மயக்க மருத்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்.. அதிர்ச்சி சம்பவம்!

காவல்துறைக்கு தகவல் தெரிவித்த பொதுமக்கள்

அந்த பொருள் பார்பதற்கு வெடி பொருள் போல் தோற்றம் அளித்ததால் பயந்துப்போன பொதுமக்கள் அது குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் தகவலின்படி, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிவன் கோயில் குளத்தில் மர்ம பொருள் கிடப்பதாக பொதுமக்கள் கூறியது ஒரு ராக்கெட் லாஞ்சர் என்பதை உறுதி செய்தனர்.

இதையும் படிங்க : Arvind Kejriwal : “டெல்லி மாதிரியை இந்தியா முழுவதும் அமல்படுத்துங்கள்”.. பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்!

இந்த நிலையில் இந்த ராக்கெட் லாஞ்சர் எங்கிருந்து வந்தது, அதை யார் அங்கு வீசியது என்பது குறித்த எந்த தகவலும் தெரியாத நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை

ராக்கெட்டுக்கும் அந்த பகுதிக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில், அங்கு எப்படி ராக்கெட் லாஞ்சர் வந்தது என தெரியாமல் காவல்துறையினர் குழம்பி வருகின்றனர். மேலும் இந்த லாஞ்சர் தற்போது தான் அந்த பகுதிக்கு வந்ததா அல்லது பல ஆண்டுகளாக மண்ணில் புதைந்து கிடந்த நிலையில், தற்போது வெளியே தெரிந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video : பிறந்தநாள் கேக்கில் எடுக்க எடுக்க வந்த 500 ரூபாய் நோட்டுகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மேலும் ராக்கெட் லாஞ்சரை யாரேனும் நோக்கத்துடன் அங்கு வீசி சென்றார்களா என்பதை சோதனை செய்ய, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் மொபைல் போனை எப்போது மாற்ற வேண்டும் - தெரிஞ்சிக்கோங்க!
ப்ரோக்கோலியில் இவ்வளவு நன்மைகளா?
சர்க்கரை பதில் வெல்லம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
சாப்பாட்டில் நெய் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?