Royapuram Railway Station: 168 ஆண்டு கால வரலாறு.. தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில்.. சென்னைக்கு கிடைத்த வரப்பிரசாதம்!
ராயபுரம் ரயில் நிலையத்தின் பாரம்பரிய கட்டிடத்தை வில்லியம் அடெல்பி டிரேசி வடிவமைத்தார். தென்னிந்தியாவின் முதல் ரயில் ஜூலை 1 1856ல் ராயபுரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கத் தொடங்கியது. அப்போதைய கவர்னர் லார்ட் ஹாரிஸ் இந்த ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். அந்த ரயிலில் கவர்னர் லார்ட் ஹாரிஸ் உட்பட 300 ஐரோப்பியர்கள் முதல் ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில்: சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக ரயில் சேவை இருக்கிறது. இந்தியா நாட்டின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இயங்கி வருகிறது. இது ஆங்கிலேயர்களால் ஒன்றாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இயங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் முதல் ரயில் நிலையம் எனும் பெருமையை பெறுகிறது ராயபுரம் ரயில் நிலையம். மேற்கு வங்காளத்தின் ஹவுரா ரயில் நிலையத்திற்குப் பிறகு தற்போது இந்தியாவின் இரண்டாவது பழமையான ரயில் நிலையமாக ராயபுரம் திகழ்கிறது. கடந்த 1849ல் மெட்ராஸ் இரயில் நிறுவனம் மறுசீரமைக்கப்பட்டபோது தென்னிந்தியாவில் புதிய ரயில் பாதைக்கான திட்டங்கள் புத்துயிர் பெற்றன. அப்போதுதான் ராயபுரம் புதிய ரயில் நிலையத்திற்கான இடமாக தேர்வு செய்யப்பட்டது. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் ஆங்கிலேய வணிகர்கள் மற்றும் பூர்வீக வாசிகளின் குடியேற்றங்கள் இருந்ததால் புதிய நிலையத்துக்கான இடமாக ராயயுபரம் தேர்வு செய்யப்பட்டது.
ராயபுரம் ரயில் நிலையத்தின் பாரம்பரிய கட்டிடத்தை வில்லியம் அடெல்பி டிரேசி வடிவமைத்தார். தென்னிந்தியாவின் முதல் ரயில் ஜூலை 1ஆம் தேதி 1856ல் ராயபுரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கத் தொடங்கியது. அப்போதைய கவர்னர் லார்ட் ஹாரிஸ் இந்த ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். அந்த ரயிலில் கவர்னர் லார்ட் ஹாரிஸ் உட்பட 300 ஐரோப்பியர்கள் முதல் ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அன்றைய தினம் ராயபுரம் நிலையத்திலிருந்து புறப்பட்டு வாலாஜா சாலையை அடைய 3 மணிநேரம் ஆனது. அப்போது முதல் தென்னிந்தியாவின் முதல் பயணிகள் சேவையை ராயபுரம் ரயில் நிலையம் வழங்கியது.
Also Read: குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை.. LPG விலை நிலவரம் இதோ!
168 ஆண்டு கால வரலாறு..
1922 ஆம் ஆண்டு வரை சென்னை மற்றும் தெற்கு மஹரத்தா ரயில்வேயின் தலைமையகமாக இந்த நிலையம் இருந்தது. பராமரிப்பு இல்லாததால், ராயபுரம் ரயில் நிலைய கட்டடம் பல ஆண்டுகளாக இடிந்து விழும் நிலையில் இருந்தது. முன்பு ராணுவ தளமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையத்தின் ஒரு முனை, விளையாட்டு மைதானமாக மாறியது, பெரும்பாலான பகுதிகள் அதிகமாக வளர்ந்த புதர் செடிகளால் மூடப்பட்டிருந்தது.
ரயில் நிலையத்தின் மறுமுனை சரக்கு ரயில்களின் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பிரதான கட்டிடத்தை ஒட்டிய நடைமேடை பயணிகள் ரயில்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 2005 இல், இந்தக் கட்டிடம் 3.5 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு, 2 அக்டோபர் 2005 அன்று ரயில்வேக்கான அப்போதைய மத்திய அமைச்சர் ஆர். வேலுவால் மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்து வைத்தார். இந்தநிலையில், ராயபுரம் ரயில் நிலையம் அதன் 168வது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறது.
Also Read: வெளுத்து வாங்கும் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களில்?