சென்னையில் ரூ.27 கோடி மதிப்பிலான மெத்தப்பட்டமைன் பறிமுதல்.. சினிமா பாணியில் தட்டித்தூக்கிய போலீஸ்..
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மூலக்கடை பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது இலங்கை நாட்டைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் இருந்து சுமார் 1.8 கிலோ மெத்தப்பட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூபாய் 27 கோடி மதிப்புள்ள மெத்தப்பட்டமைன் போதை பொருளை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 2.7 கிலோ மெத்தப்பட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெறும் தகவல்களை வைத்து, தொடர்ந்து கடத்தலில் ஈடுபடுபவர்களை சென்னை காவல்துறையின் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் மாதவரம் பேருந்து நிலையத்தில் போலிசார் நாடகமாடி ஒரு கிலோ மெத்தபட்டமைன் போதைப் பொருளை வாங்குவது போன்று நடித்து சினிமா பாணியில் கடத்தல் காரர்களை கையும் களவுமாக கைது செய்தனர்.
மேலும் இதுபோன்று கடத்தலில் ஈடுபடும் நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் கடத்தலில் நைஜீரியன் மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் டிஜிபி மகனும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? மெட்ரோ ரயில் சேவை நீடிப்பு..
இந்த நிலையில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மூலக்கடை பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது இலங்கை நாட்டைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் இருந்து சுமார் 1.8 கிலோ மெத்தப்பட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
ரூ.27 கோடி மதிப்பிலான மெத்தப்பட்டமைன்:
விஜயகுமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் போதைப்பொருள் கடத்த உதவியாக இருந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது மணிவண்ணன் என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது மேலும் 900 கிராம் மெத்தப்பட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக இந்த 2.7 கிலோ மெத்தப்பட்டமைன் போதைப் பொருள் சர்வதேச சந்தையில் சுமார் 27 கோடி ரூபாய் மதிப்புடையது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடமிருந்து 15 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
Also Read: நடிகர் விஜய்க்கு டப் கொடுத்து அவரை விட அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?
கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி?
விஜயகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோரையும் விசாரணை மேற்கொண்டதில் விஜயகுமார் கன்னியாகுமரி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் கோயம்புத்தூர் வழியாக சென்னைக்கு மெத்தப்பட்டமைன் போதை பொருளை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக வந்த விஜயகுமார் சென்னையில் மெத்தபட்டமைன் போதை பொருளை வாங்கிக்கொண்டு, ராமநாதபுரம் மண்டபம், தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் எங்கிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் யார் யாரிடமிருந்து மெத்தப்பட்டமைன் போதைப் பொருள் கை மாறி இலங்கைக்கு கடத்தப்படுகிறது, என்பது குறித்து விரிவான விசாரணை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட விஜயகுமார் மற்றும் மணிவண்னனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில் அடுத்தடுத்து மெத்தப்பட்டமைன் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக காவல்துறையினரும் ,போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் கைது நடவடிக்கை மற்றும் போதைப் பொருள் பறிமுதல் செய்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.