மாணவர்களை கால் அழுத்தச் சொல்லி ஓய்வெடுக்கும் ஆசிரியர்.. நடவடிக்கை எடுத்த கல்வித்துறை!
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் வகுப்பறையில் மாணவர்களை கால் அழுத்தச் சொல்லி ஆசிரியர் ஓய்வெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இதனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் வகுப்பறையில் மாணவர்களை கால் அழுத்தச் சொல்லி ஆசிரியர் ஓய்வெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இது சம்பந்தமான வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மாணவர்களை கால் அழுத்தச் சொல்லி ஓய்வெடுக்கும் ஆசிரியர்
அதே சமயத்தில் ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இப்படி இருக்கையில், ஆசிரியர்கள் மீது பல்வேறு புகார்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது. குறிப்பாக, மாணவர்களை கழிவறை சுத்தம் செய்வது, வகுப்பறையை சுத்தம் செய்வது, ஆசிரியரின் தனிப்பட்ட வேலைக்கு மாணவர்களை பயன்படுத்துவம் போன்ற புகார்கள் எழுந்து வருகிறது.
இது சம்பந்தமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகும். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் வகுப்பறையில் மாணவர்களை கால் அழுத்தச் சொல்லி ஆசிரியர் ஓய்வெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள ராஜபாளையம் கிராமத்தில் அசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஜெயபிரகாஷ் மாணவர்களை கால் அழுத்தச் சொல்லி ஓய்வெடுத்துள்ளார்.
Also Read : சென்னை விரையும் விக்கிரவாண்டி விவசாயிகள்.. சூப்பர் விருந்தளிக்கும் விஜய்.. இதுதான் காரணமா?
அதிரடி நடவடிக்கை எடுத்த கல்வித்துறை
இதனை அப்பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், ஆசிரியர் ஜெயபிரகாஷ் நாற்காலியில் அமர்ந்திருக்க, அங்கிருக்கும் மாணவர் ஒருவர் அவரது காலை அழுத்துகிறார்.
ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்து கொண்டே தூங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ஆசிரியர் ஜெயபிரகாஷை மாவட்ட கல்லி அலுவலர் கபீர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஜெயபிரகாஷ் காமக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கணக்கு ஆசிரியராக பணியாற்றியதும் தெரியவந்துள்ளது. மேலும், இவர் வகுப்பு சரியாக வருவதில்லை என்றும் அடிக்கடி மது போதையில் பள்ளிக்கு வந்து பாடம் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
Also Read : அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
இதனால், இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், மாணவர்களை கால் அழுத்திச் சொல்லி இவர் ஓய்வெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.