5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Salem: கால் அமுக்கி விடுப்பா.. மாணவர்களை வேலை வாங்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்!

Teacher Suspend: மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதற்கு ஒப்பாக தெய்வத்திற்கு மேலானவர்கள் என ஆசிரியர்கள் கருதப்படுகின்றனர். வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதனை தெய்வம் உருவாக்கினார் என சொன்னால் அந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்களாகத்தான் இருப்பார்கள்.அப்படிப்பட்ட புனிதமான ஆசிரியர்களில் சிலர் செய்யும் இது போன்ற செயல்கள் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது.

Salem: கால் அமுக்கி விடுப்பா.. மாணவர்களை வேலை வாங்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 22 Nov 2024 19:37 PM

சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கால் இழுத்த சொல்லி ஓய்வெடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ராஜபாளையம் பகுதியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக ஜெய பிரகாஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே இவரது நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக குடிபோதையில் பள்ளிக்கு வருவதாகவும் வந்தால் பாடம் எடுக்காமல் தூங்குவதாகவும், வகுப்பு மாணவர்களை கை, கால் அமுக்க சொல்லி வேலை வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இப்படியான நிலையில் இன்று மாணவர்களை தனது காலை அழுத்த சொல்லிவிட்டு ஜெயப்பிரகாஷ் தூங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.’

Also Read: Crime: திருச்சியை உலுக்கிய கொலை.. சினிமா பாணியில் சிக்கிய குடும்பம்.. என்ன நடந்தது?

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கடுமையாக கண்டித்துள்ளனர். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த வீடியோ பரவ அவர்களில் சிலர் நியாயம் கேட்டு பள்ளிக்கு படையெடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட கல்வி நிர்வாகம் பார்வைக்கு இந்த வீடியோ அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஜெயபிரகாசை பணிட நீக்கம் செய்து சேலம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆசிரியர்களை நம்பித்தான் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அனுப்பி வைக்கும் நிலையில் அவர்களே இப்படியாக நடந்துகொள்வது கவலையளிப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதற்கு ஒப்பாக தெய்வத்திற்கு மேலானவர்கள் என ஆசிரியர்கள் கருதப்படுகின்றனர். வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதனை தெய்வம் உருவாக்கினார் என சொன்னால் அந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்களாகத்தான் இருப்பார்கள். நம்முடைய எதிர்காலத்தை செதுக்குபவர்களில் அவர்களே முதன்மையானவர்கள். அப்படிப்பட்ட புனிதமான ஆசிரியர்களில் சிலர் செய்யும் இது போன்ற செயல்கள் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஒரு சிலர் செய்யும் தவறான விஷயங்கள் ஒட்டுமொத்த ஆசிரியர்களை குறை சொல்லும் அளவுக்கு செல்கிறது.

Also Read: Cuddalore: ஒரே நேரத்தில் 15 மாத்திரைகள்.. சூப்பர்மேனாக மாற முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி!

மாணவர்கள் – ஆசிரியர்கள் உறவு

சரியாகப் பாடம் எடுக்காதது, மாணவர்களிடம் பிரிவினை காட்டுவது, மதிப்பெண்களில் கை வைப்பது என பல நிகழ்வுகளை செய்வதால் ஆசிரியர் – மாணவர் இடையேயான உறவானது மதிப்பில்லாமல் போய்விட்டது. இதனால் ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசும் பள்ளிகளில் மேம்படுத்தப்பட்ட சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் நிலையில் சில இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு கூட்டம் கூட அலைமோதம் அளவுக்கு உள்ளது. இப்படியான நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து சரியாக மாணவர்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாணவர்களை படிக்குமாறு கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு புரியுமாறு எடுத்துச் சொல்லி விளக்க வேண்டும்.

Also Read: AIADMK: கோஷ்டி மோதலில் சிக்கி தவிக்கிறதா அதிமுக? – மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

மேலும் விளையாட்டு, ஓவியம் மற்றும் இன்ன பிற கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தால் அதனை அறிந்து வளர்க்க உதவ வேண்டும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஆரோக்கியமான உரையாடல் நிகழும் வண்ணம் வாரம் ஒரு முறை கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம். பள்ளியில் புகார் பெட்டி வைக்கப்பட்டு மாணவர்கள் ஆசிரியர்களால் பாதிக்கப்பட்டால் அதன் மூலம் புகார் அளிக்க சொல்லலாம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஆசிரியர்கள் மீதான களங்கம் நீங்கி புதிதாக நம்பிக்கை பிறக்கும்.

Latest News