Seeman : சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு.. ஏன் தெரியுமா?
SC, ST Commission | அஜேஷ் என்பவர் ஆவடியை அடுத்த பட்டாபிராம் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் அஜேஷின் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அஜேஷ், எஸ்.டி, எஸ்.சி ஆணையத்திடம் சீமான் பேசியது குறித்து புகார் அளித்திருந்தார்.
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு : கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் நிலையில், அவரை விமர்சிப்பதற்காக “சண்டாளன்” என்ற சொல்லை சீமான் பயன்படுத்தியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஒரு சமூகத்தின் பெயரை பயன்படுத்தி பேசியது, அந்த சமூகத்தை சேர்ந்தவர்களை இழிவுபடுத்தும் விதமாக இருந்ததாகவும் கூறப்பட்டது. அதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க : National Best Teacher Award 2024 : தேசிய நல்லாசிரியர் விருது.. குக்கிராமத்தில் இருந்து தேர்வான கோபிநாத்.. அப்படி என்ன செய்தார்?
அஜேஷ் என்பர் அளித்த புகாரின் விசாரணையில் எஸ்.டி, எஸ்.சி ஆணையம் அதிரடி
அந்த வகையில், அஜேஷ் என்பவர் ஆவடியை அடுத்த பட்டாபிராம் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் அஜேஷின் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அஜேஷ், எஸ்.டி, எஸ்.சி ஆணையத்திடம் சீமான் பேசியது குறித்து புகார் அளித்திருந்தார். அஜேஷின் புகாரின் மீது விசாரணை நடந்தப்பட்ட நிலையில், சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக சீமான் மீது வழக்குப் பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையருக்கு எஸ்.சி, எஸ்.டி ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க : Actor Vijay : 85 ஏக்கர் இடம்.. 1.5 லட்சம் தொண்டர்கள்.. விஜய் மாநாட்டுக்கு முழு திட்டம்.. வெளியான புது தகவல்!
கருணாநிதி குறித்து மேடையில் அவதூறு பாடலை பாடிய சீமான்
முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கொலை செய்பவர்கள், சாராயம் காய்ச்சுபவர்கள் மீது பாயாத வழக்கு மேடையில் பேசியதற்கு பாய்கிறது. கருணாநிதி குறித்த பாடலை பாடியதற்கு கைது செய்திருக்கிறார்கள். அந்த பாடலை எழுதியவர்கள், பாடியவரை கைது செய்தார்களா என கேள்வி எழுப்பினார். அதுமட்டுமன்றி இப்போது நான் அந்த பாடலை பாடுகிறேன், என் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள் என்று அவர் அந்த பாடலை பாடி காட்டியது குறிப்பிடத்தக்கது.