செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. ஜூலை 10க்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்.. காரணம் என்ன?
செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொலிசிட்டல் ஜெனரல் வேறு ஒரு வழக்கில் ஆஜராகுவதால் வழக்கு விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதிட்டது. இதனை அடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை நாளை விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றனர்.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிராக 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்தது. இதனை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்த அவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஜாமீன் கோரியும், அமகலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜால் புய்யான் தலைமையிலான அமர்வுக்கு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர்கள் ராம் சங்கருடன் மூத் வழக்கறிஞர்கள் ஆர்யமா சுந்தரம், முகுல் ரோத்தகி ஆகியோர் வாதாடினர். அதாவது, “மனுதாரர் செந்தில் பாலாஜிக்கு இதய பைபபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அவர் 330 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். இதனால், அவரது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்” என்றனர்.
Also Read : Tamil Nadu Weather: அடுத்த 3 மணி நேரம்.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை!
ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதற்கு நீதிபதி அபஸ் எஸ்.ஓகா, “மனுதாரர் 330 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதன் காரணமாக அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற உங்கள் வாதத்தில் நாங்கள் உடன்படவில்லை. ஒருவர் முழுத் தண்டனைக் காலத்தில் பாதிக்கு மேல் சிறையில் அனுபவித்த பிற வழக்குகளும் உள்ளன” என்றார்.
இதனை அடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “ஜிஎஸ்டி தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன் ஆஜராக வேண்டியுள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்று விசாரிப்பதாக கூறினர். அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொலிசிட்டல் ஜெனரல் வேறு ஒரு வழக்கில் ஆஜராகுவதால் வழக்கு விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதிட்டது. இதனை அடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.