School Leave: கனமழை எதிரொலி.. நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!
Fengal Cyclone: ஃபெங்கால் புயல் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை மற்றும் கடும் பனியானது நிலவி வருகிறது.
கல்வி நிறுவனங்கள் விடுமுறை: கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் உருவான குறைந்த காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதைத் தொடர்ந்து ஃபெங்கால் புயல் உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை மற்றும் கடும் பனியானது நிலவி வருகிறது. இந்த ஃபெங்கால் புயலானது நவம்பர் 28 மற்றும் நவம்பர் 29ஆம் தேதி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி இலங்கை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை (நவம்பர் 28) நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவித்துள்ளது. மகிழ்ச்சியாக அங்கு மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் புயல் காரணமாக கூடிய கரை கடற்கரையில் கடல் அலைகள் பழுப்பு நிறமாக மாறி உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த தரைக்காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலை
முன்னதாக இன்று விழுப்புரம் திருச்சி, ராமநாதபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதே சமயம் சென்னை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, சிவகங்கை, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டிருந்தது.
சென்னையைப் பொறுத்தவரை நேற்று மழை பரவலாக பெய்த நிலையில் இன்று குளிர்ந்த காற்று மட்டுமே வீசி வருகிறது. மழை பெரிதாக இல்லாத நிலையில் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளதால் மழையின் தாக்கம் படிப்படியாக தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.