School Leave: கனமழை எதிரொலி… 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
Heavy Rain: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இது வடமேற்கு திசையில் தமிழ்நாடு - இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை: கனமழை காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இது வடமேற்கு திசையில் தமிழ்நாடு – இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து 880 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 1050 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Also Read: ’ரெட் அலர்ட்’ தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் வார்னிங்!
இதற்கிடையில் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நெருங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தற்போது நாகப்பட்டினத்திற்கு 630 கிலோமீட்டர் தெற்கு -தென்கிழக்கிலும், திரிகோணமலைக்கு 340 கிலோமீட்டர் தெற்கு- தென் கிழக்கிலும், புதுச்சேரிக்கு 750 கிலோமீட்டர் தெற்கு – தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Sore Throat: மழைக்காலத்தில் தொண்டை புண் தொல்லையா..? இதை செய்து குணப்படுத்தலாம்!
இன்று காலை 10 மணி வரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்றும், நாளையும் 21 செ.மீ., க்கு அதிகமான மழைப்பொழிவுக்கு வாய்ப்பிருக்கும் என்பதால் இரண்டு நாட்கள் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.