School Holiday: வரும் திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கே தெரியுமா?
இந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிறைவு அடைகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 10 ஆம் நாள் நகர வீதிகளில் பனிமய மாதா அன்னையின் திருவுருவ தங்கத் தேர்ப்பவனி நடைபெறும். கொடிக்கம்பம் முன் பால், பழம், பேரீச்சம்பழம் நேர்ச்சை பொருட்களாக படைக்கப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
பள்ளி விடுமுறை: பொதுவாக மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களின் திருவிழா போது மக்கள் அனைவரும் கலந்து கொள்ள அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “ தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசு கருவூலகங்கள், முக்கிய அலுவலகங்கள் ஆகியவை குறைந்த ஊழியர்களுடன் இயங்கும்.வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சச்சினின் சிறப்பு பட்டியலில் இணைந்த ரோஹித்.. வார்னரை பின்னுக்கு தள்ளி அசத்தல்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் பனிமய மாத கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வரை மிகவும் கோலாகலமாக கொண்டாப்படும். இந்த திருவிழாவின் போது உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் மக்கள் தூத்துக்குடிக்கு வருகை தருவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிறைவு அடைகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 10 ஆம் நாள் நகர வீதிகளில் பனிமய மாதா அன்னையின் திருவுருவ தங்கத் தேர்ப்பவனி நடைபெறும். கொடிக்கம்பம் முன் பால், பழம், பேரீச்சம்பழம் நேர்ச்சை பொருட்களாக படைக்கப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
மேலும் படிக்க: வடிவேலு அப்படி பண்ணியிருக்கக்கூடாது.. சுவாமிநாதனுக்கு நடந்த கசப்பான சம்பவம்!
அதிகப்படியான மக்கள் கூடுவார்கள் என்பதால் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அன்று அரசு கருவூலங்கள், முக்கிய அலுவலகங்கள் ஆகியவை குறைந்த ஊழியர்களுடன் இயங்கும். குறிப்பாக இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.