5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Holiday: குட் நியூஸ் மாணவர்களே… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கெங்கு தெரியுமா?

ஆடி கிருத்திகை 2024: ஆடி கிருத்திகையையொட்டி திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம், ஆடிப்பெருக்கு விழா மற்றும் கோட்டை மாரியம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

School Holiday: குட் நியூஸ் மாணவர்களே… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கெங்கு தெரியுமா?
மாணவர்கள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Jul 2024 19:53 PM

ஆடி கிருத்திகை: ஆடி மாதம் பிறந்தாலே நம் இல்லங்களிலும் தெய்வம் நேரடியாக குடிகொண்டு விடும் என சொல்வார்கள். அந்த அளவுக்கு பக்தி மாதமாக திகழும் இந்த நாள்களில் பல்வேறு ஊர்களில் உள்ள அம்மன் கோயில்களில் திருவிழா நடைபெறும். மிகப்பெரிய அம்மன் கோயில்கள் மட்டுமின்றி ஒவ்வொரு ஊரிலும் உள்ள அம்மன் கோயில்களிலும ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆடி மாதத்தில் கோயில்களில் கூழ் ஊற்றுதல், அன்னதானம் உள்ளிட்ட பல விசேஷங்கள் நடைபெறும். இதனால்  உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு  சில மாவட்டங்களில் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற 29ஆம் தேதி திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழ்கிறது. இங்கு ஆடி கிருத்திகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

Also Read: நிதி ஆயோக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம்..!

உள்ளூர் விடுமுறை:

இந்த ஆண்டு ஆடி கிருத்திகை வருகிற 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் எனவும் ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். அதேபோல சேலம் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம், ஆடிப்பெருக்கு விழா மற்றும் கோட்டை மாரியம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது. அதேபோல கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதே நேரத்தில் மாவட்ட கருவூலம் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படும். ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: நீலகிரி கோவையில் தொடரும் கனமழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?

Latest News