5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Holiday: கொட்டித்தீர்த்த கனமழை.. குமரியில் இன்று பள்ளிகள் விடுமுறை!

Heavy Rain: தீபாவளி நேரமாக இருப்பதால் மழை கொட்டுவதால் சாலையோர வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான நிலையில் தான் முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (அக்டோபர் 25) விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை ஒருபக்கம் தொடங்கியுள்ள நிலையில், டானா புயலும் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி இன்று கரையைக் கடக்க உள்ளது.

School Holiday: கொட்டித்தீர்த்த கனமழை.. குமரியில் இன்று பள்ளிகள் விடுமுறை!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 22 Nov 2024 11:07 AM

பள்ளிகள் விடுமுறை: தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். அம்மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வாகன ஓட்டிகள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றனர். தீபாவளி நேரமாக இருப்பதால் மழை கொட்டுவதால் சாலையோர வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான நிலையில் தான் முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (அக்டோபர் 25) விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை ஒருபக்கம் தொடங்கியுள்ள நிலையில், டானா புயலும் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி இன்று கரையைக் கடக்க உள்ளது.

Also Read: Green Chilli Benefits: பச்சை மிளகாய் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம்..! இந்த உடல்நல பிரச்சனைகளை சரி செய்யுமா?

இதன்  காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த ஒருவார காலமாகவே கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், தூத்துக்குடி, சேலம், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும்  தண்ணீர் கொட்டி வருகிறது. நீரின் அளவை கவனத்தில் கொண்டு சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்படுகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read: Sony WF-L910 : சோனி WF-L910 LinkBuds Open இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் இதோ!

இதனால் இன்று திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இன்று திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை தேனி,தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியு இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Latest News