School Leave: தொடரும் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா தாலுக்கா பகுதிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்துள்ளார்.
பள்ளி விடுமுறை: தமிழ்நாட்டில் கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக நீலகிரி கூடலூர் பகுதியில் தொடர் கனமழையால் சாலைகள் மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. பலரும் தண்ணீரில் சிக்கிய நிலையில் அவர்களை பத்திரமாக மீட்பு படையினர் மீட்டனர். இந்நிலையில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக வால்பாறையில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களில் இருக்கும் பள்ளிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் படிக்க: கார்த்தியின் ‘மெய்யழகன்’ ரிலீஸ் எப்போது? சூப்பர் அப்டேட் இதோ!
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
18.07.2024 மற்றும் 19.07.2024 : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20.07.2024 மற்றும் 21.07.2024: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
18.07.2024 மற்றும் 19.07.2024: மத்திய வங்கக்கடல், தென் வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு, மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20.07.2024:மத்திய வங்கக்கடல் அதனை ஒட்டிய தென் வங்கக்கடல், வடக்கு வங்கக் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு, மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல்பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21.07.2024: மத்திய வங்கக்கடல் அதனை ஒட்டிய தென் வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், வடக்கு வங்கக் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு, மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
21.07.2024 வரை: மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு அரபிக்கடல் பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: ஜி.வி.பிரகாஷ் இசையில் தங்கலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!