5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paramakudi: பரமக்குடியில் சிறுமியை கடித்த நாய்.. நேரம் அப்படி என சொன்ன பள்ளி நிர்வாகம்!

Ramanathapuram: கடந்த இரு மாதங்களாகவே என்னுடைய மகள் பாதுகாப்பு இல்லாமல் தான் இருந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பாக மூக்கில் சாக்பீஸ் நுழைத்ததால் ரத்தம் வந்ததாக தெரிவித்தார்கள். அதற்கு மருத்துவம் பார்த்த சில நாட்களில் குழந்தைக்கு அதிகமாக காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்தது.

Paramakudi: பரமக்குடியில் சிறுமியை கடித்த நாய்.. நேரம் அப்படி என சொன்ன பள்ளி நிர்வாகம்!
தெருநாய் Image Credit source: Pexels
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Dec 2024 06:54 AM

ராமநாதபுரத்தில் பள்ளி சிறுமியை தெரு நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சரஸ்வதி நகரில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் எல்கேஜி படித்து வரும் 4 வயது சிறுமி நேற்று முன்தினம்  வகுப்பறையிலிருந்து கழிவறைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. தற்போது பள்ளி வளாகத்திற்குள் கூட்டமாக வந்த தெரு நாய்கள் சிறுமி தனியாக செல்வதை கண்டதும் கடிக்க துரத்தியுள்ளது. இதனால் பயந்து போன சிறுமி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். ஆனாலும் விடாமல் துரத்திய நிலையில் பள்ளி வளாகத்திற்குள் தெரு நாய்கள் புகுந்ததை யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர். இறுதியாக நாய் கடித்ததில் சிறுமி படுகாயம் அடைந்தார்.

Also Read: Tiruvannamalai: மகாதீபம் காண திருட்டுத்தனமாக சென்று மாட்டிக்கொண்ட பெண்!

தீவிர சிகிச்சையில் குழந்தை

இந்த சம்பவத்தில் நாய் ஒன்று சிறுமியின் முகத்தில் மிகக் கடுமையாக தாக்கியது. அவரது அலறல் சத்தத்தை கேட்ட பள்ளியில் இருந்த பணியாளர்கள் நாயை விரட்டி விட்டு சிறுமியை மீட்டுள்ளனர். முகத்தில் இரத்த காயத்துடன் மீட்கப்பட்ட சிறுமி பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்து சிறுமியின் நிலையைப் பார்த்து கதறி அழுதனர்.

இந்த நிலையில் பள்ளி வளாகத்திற்குள் தெரு நாய்கள் வருவதை தடுக்காமல் ஏன் விட்டீர்கள் என பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பியதாக சொல்லப்படுகிறது. இதற்கு நிர்வாகம் தரப்பில் அலட்சியமாக பதில் அளித்ததாக இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: Viral Video : நிஜ வாழ்க்கை Subway Surfer இதுதானா.. ரயிலின் மேற்கூரையில் படுத்துக்கொண்டு பயணித்த நபர்!

போலீசில் புகார் 

இது தொடர்பாக பரமக்குடி போலீசில் பள்ளி நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிறுமியின் தந்தை, “நான் அருகில் உள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடைய மகளை கவனக்குறைவாக விட்டதால் நாய் கடித்து விட்டது. கழிவறை செல்வதற்கு எந்தவித பாதுகாப்புக்கும் யாரும் செல்லாத நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவ்வளவு பெரிய பள்ளியில் நாய் கடித்து எனது குழந்தை தனியாக கிடந்துள்ளது.

பள்ளி நிர்வாகத்தை இது தொடர்பாக கேள்வி எழுப்பினால் அமைதியாக இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் நேரம் தப்பாக இருந்தால் அப்படித்தான் நடக்கும் என அலட்சியமாக கூறுகிறார்கள். கடந்த இரு மாதங்களாகவே என்னுடைய மகள் பாதுகாப்பு இல்லாமல் தான் இருந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பாக மூக்கில் சாக்பீஸ் நுழைத்ததால் ரத்தம் வந்ததாக தெரிவித்தார்கள். அதற்கு மருத்துவம் பார்த்த சில நாட்களில் குழந்தைக்கு அதிகமாக காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்தது. என்னவென்று விசாரித்ததில் பள்ளியில் தண்ணீரில் விளையாட விட்டு வேடிக்கை பார்த்துள்ளார்கள். கடந்த 10 நாட்கள் முன்பு கூட பள்ளி நிர்வாகத்திடம் என் மகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என கண்ணீருடன் தெரிவித்தேன். ஆனால் இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்து என் குழந்தையை நாய் கடிக்க விட்டு இருக்கிறார்கள்” என தெரிவித்தார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீதும், நாய் தொல்லைக்கு பரமக்குடி நகராட்சியும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Latest News