பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு… வெளியான ரீல்ஸ்.. ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு!
Vellore School: வேலூர் மாவட்டத்தில் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று செட் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமுக வலைதளத்தில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று செட் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமுக வலைதளத்தில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களின் மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்கள் தங்களின் வாழ்நாளை வீடியோ பதிவு செய்து பதிவிடுவது, நடனமாடுவது, சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது என அனைத்தையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு வீடியோ பதிவிடும் நபர்களை பலர் பின்தொடர்வது மட்டுமன்றி, அதில் வருமானமும் ஈட்டுகின்றனர்.
பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு:
இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வருமானம் ஈட்டுவதற்கும், பிரபலமாக்குவதற்கும் இவ்வாறு சமூக வலைதளத்தில் ரீல்ஸ் செய்து வருகின்றனர். அவ்வாறு செய்வது ஒரு பக்கம் வருமானத்தை கொடுத்தாலும், சில நேரங்களில் தவறாக வழிநடத்துகிறது. குறிப்பாக பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தவறான விஷியத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
அதாவது, பள்ளிகளில் ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனை தடுக்க பள்ளிக்கல்வித்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே இந்த நிகழ்வுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், 12ஆம் வகுப்பு மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று செட் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமுக வலைதளத்தில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் எங்கு நடந்தது? நிர்வாகம் இதற்ககாக எடுத்த நடவடிக்கை என்னவென்று பார்ப்போம். வேலூர் மாவட்டம் கடையநல்லூர் அருகே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவிகள் சிலர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர்.
ரீல்ஸ் வெளியிட்ட +2 மாணவிகள்:
இதற்காக தனி அக்கவுண்ட் ஓபன் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருவதாக தெரிகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட மாணவிக்கு வளைகாப்பு போலியாக நடத்த முடிவு செய்தனர். இதற்காக ஆன்லைனில் அழைப்பிதழை உருவாக்கி உள்ளனர். அந்த அழைப்பிதழில் சம்பந்தப்பட்ட மாணவி பெயரும், ஆண் ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து, பள்ளி வளாகத்திலேயே ஒரு இடத்தில் வளைகாப்புக்கான பொருட்களை வைத்து அந்த சம்பந்தப்பட்ட மாணவியை அமர வைத்துள்ளனர். அந்த மாணவிக்கு காகிதத்தைக் கொண்டு மாலை செய்து அதை கழுத்தில் அணிவித்து, வயிற்றில் துணியைச் சுற்றி கர்ப்பிணியாக காட்டியுள்ளனர்.
இதனை அடுத்து, திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியவற்றை முகத்தில் பூசி நலங்கு வைத்து ஆர்த்தி எடுத்தும் காட்டியுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவிட்டிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
அதிரடியாக பறந்த உத்தரவு:
இந்த ரீல்ஸ் வைரான நிலையில், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி விசாரணைக்கு உத்தரவிட்டு, மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். இதனை அடுத்து வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த நிகழ்வு குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க வேண்டும்.
பள்ளிக்கு மாணவிகள் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து வருகிறார்களா என்று சோதனை செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளியிலும் மதிய உணவின்போது ஆசிரியர்கள் மாணவர்களுடனே அமர்ந்து சாப்பிட வேண்டும். வகுப்பு ஆசிரியர்கள், பாட பிரிவு ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை பதிவேட்டை கண்காணிக்க வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறையில் தான் இருக்க வேண்டும். பள்ளியில் ஏதேனும் நடந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட ஆசியர்களே பொறுப்பு” என்று அதிரடியாக கூறியுள்ளார்.
Also Read: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை இருமடங்கு உயர்வு.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?
வேலூர் மாவட்டத்தில் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று செட் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமுக வலைதளத்தில் ரீல்ஸாக வெளியிட்டுள்ள சம்பவம் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட சமூக ஆர்வலர்களும் பலரும் பள்ளிக்கு வரும் மாணவர்களை முறையாக சோதனை செய்து வகுப்பறைக்குள் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.