5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave: பருவமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையா? – அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பு விட அதிகமாக பெய்துள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கதையை கடக்கும் என்பதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

School Leave: பருவமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையா? – அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 16 Oct 2024 21:34 PM

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: கனமழை காரணமாக கடந்த 2 நாட்களாக பல மாவட்டங்களில் பள்ளி. கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் நாளையும் விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நாளை காலை நிலவரத்தைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் நிர்வாகம் முடிவெடுக்கும் என கூறப்படுகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது  சென்னைக்கு தென்கிழக்கு 250 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அதாவது புதுச்சேரியில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவிலும்,  நெல்லூரிலிருந்து 370 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைபெற்றுள்ளது. இது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை சென்னை அருகே கடையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஐப்பசி மாத ராசிபலன்… துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிக்கான பலன்கள்!

மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கரையே கடக்காததால் ஓரிரு இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பு விட அதிகமாக பெய்துள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கதையை கடக்கும் என்பதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது வரை மழை பெரிய அளவில் இல்லை. அதே சமயம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தபடி,  “பேரிடர் மேலாண்மை துறையுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் வானிலை நிலவரங்களை அறிந்து அதற்கு ஏற்ப தகுந்த முடிவுகளை எடுப்பார்கள்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்டிப்போட்ட கனமழை

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம், தாழ்வு நிலையாக மாறி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 460 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு கிழக்கு தென்கிழக்கே 530 கிலோ மீட்டர் அருகிலும் நிலை கொண்டு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை புதுச்சேரி மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்படியான நிலையில் கடந்த இரு தினங்களாக தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

Also Read: Nigeria: நைஜீரியாவில் டேங்கர் லாரி விபத்து.. பெட்ரோல் எடுக்க சென்ற 94 பேர் பலியான பரிதாபம்!

அதேசமயம் பிற மாவட்டங்களில் மழை நிலவரத்தை பொறுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.  கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த அக்டோபர் 15ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மழை நிலவரத்தைப் பொறுத்து கடலூரிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

மேலும் புதுச்சேரி மாநிலத்திலும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டிருந்தது. கோவையில் மதியம் வரை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு காரணம் முந்தைய 2 தினங்கள் மாலையில் அங்கு கனமழை பெய்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இப்படியான நிலையில் சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் துரிதமாக செயல்பட்டு தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் மீட்பு பணிகளும் சற்று மந்தமாகவே நடைபெற்று வந்தது. இப்படியான நிலையில் இன்று (அக்டோபர் 16) அதீத கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதே சமயம் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத்துறை, பால்வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், மின்சார துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகரப் போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், மின்சார ரயில், விமான போக்குவரத்து ஆகியவை வழக்கம்போல இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News