School Leave: தொடர்மழை எதிரொலி.. 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Heavy Rain: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் விடிய விடிய மழை பெய்ததால் பள்ளிகள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

School Leave: தொடர்மழை எதிரொலி.. 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கோப்பு புகைப்படம்

Updated On: 

20 Nov 2024 08:26 AM

தொடர்மழை காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அம்மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் விடிய விடிய மழை பெய்ததால் பள்ளிகள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவாரூர், காரைக்காலிலும் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராமநாதபுரத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதேசமயம், “விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மிதமான மழை பெய்துள்ளதால் இன்று (20.11.2024) பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது” என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மழை காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 2வது நாளாக நேற்றும் கனமழை கொட்டித் தீர்த்தது. 2 நாட்களில் மட்டும் அங்கு 29 செ.மீ.மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முட்டம், சிக்கல், திருமருகல்,கீழ் வேளூர் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

காதலில் பிரச்னையை உண்டாக்கும் சின்ன பொய்கள்!
நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கர்ப்பக் காலத்தில் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க சில டிப்ஸ்..
தினசரி தேங்காய் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?