Ramanathapuram 144: அச்சச்சோ.. ராமநாதபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு.. ஏன் தெரியுமா?
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.
144 தடை உத்தரவு: ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராடிய அரசியல் தலைவரும், சுதந்திர போராட்டத் தியாகியுமான இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினம் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. அதேபோல, சுதந்திர போராட்டத் தலைவர் முத்துராமலிங் தேவர் அக்டோபர் 30ஆம்தேதி மறைந்தார். பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்டோபர் 30ஆம் தேதி ஆண்டுதோறும் குருபூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்த இரு நாட்களிலும் குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இவர்களது நினைவிடங்களுக்கு வருகை தந்து மரியாதை செலுத்துவார்கள். இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை நிகழ்வுகளில் பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவர்.
Also Read: ரேசன் கடையில் பருப்பு, பாமாயில் வாங்கலயா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்த சமயங்களில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.
இதனால், வெளிமாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வாடகை கார்களில் வருகை தர தடை விதிக்கப்பட்டுள்ளது. சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த டிஎஸ்பி அலுவலகங்களில் வாகன அனுமதி சீட்டு பெற்று வர வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் அமைத்துக கொண்டோ, பேனர்கள் கட்டிக்கொண்டோ வரக்கூடாது. வழிகளில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. மேலும், சாதி பெயருக்கான முழக்கங்கள் எழுப்ப கூடாது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்காசியில் இன்று முதல் 144 உத்தரவு:
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 309வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பபடுகிறது. இதையொட்டி, தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவனின் வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
Also Read: வீக் எண்ட் வெளியே போறீங்களா? சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எந்த ரூட் தெரியுமா?
இதனால், தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் இன்று முதல் மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 144 தடை உத்தரவு அறிவிப்பின்படி, 4 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.