47வது முறையாக நீதிமன்ற காவல் நீடிப்பு .. செந்தில் பாலாஜி வழக்கு மீண்டும் இரண்டு நாட்களில் விசாரணை..

திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியபோது, கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது வசம் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியின்போது 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை செந்தில் பாலாஜிபோக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துறையில் பணியாளர்களை பணியமர்த்தியபோது, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

47வது முறையாக நீதிமன்ற காவல் நீடிப்பு .. செந்தில் பாலாஜி வழக்கு மீண்டும் இரண்டு நாட்களில் விசாரணை..

முன்னாள் அமைச்சஎ செந்தில் பாலாஜி

Updated On: 

21 Jul 2024 21:19 PM

செந்தில் பாலாஜி: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தபட்ட பின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார். மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது.

திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியபோது, கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது வசம் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியின்போது 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை செந்தில் பாலாஜிபோக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துறையில் பணியாளர்களை பணியமர்த்தியபோது, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தரவில்லை எனவும், பணத்தையும் திருப்பித் தரவில்லை எனவும் கூறி செந்தில் பாலாஜி மீது நேரடியாக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு பல கட்டங்களைக் கடந்து அமலாக்கத்துறை வசம் வந்தது. அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி பல முறை சம்மன் அனுப்பியும் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி நள்ளிரவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

Also Read: இன்ஸ்டா வலை.. ரசிகர்களை அடிமையாக்கி பாலியல் தொழில்.. பிரபல மாடல் கைது.. ஷாக் சம்பவம்!

பின்னர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் ஜாமின் மனு செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதனை முதன்மை நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்து நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று, வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தபட்ட பின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார். மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

Also Read: அழிவின் விளிம்பில் இருக்கும் 4 நாடுகள்.. காரணம் என்ன தெரியுமா?

தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?