Chennai Powercut: சென்னையில் இந்த பகுதிகளுக்கு இன்று மின்தடை.. லிஸ்ட் இதோ! - Tamil News | Several places in chennai will have power cut today from 9 am to 2 pm due to maintenance | TV9 Tamil

Chennai Powercut: சென்னையில் இந்த பகுதிகளுக்கு இன்று மின்தடை.. லிஸ்ட் இதோ!

Published: 

20 Sep 2024 07:20 AM

Area List : சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, அம்பத்தூர் சிட்கோ, பொன்னேரி, கிண்டி, நங்கநல்லூர் ஆகிய இடங்களில் நாளை மின்தடை செய்யப்பபடுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாதனங்கள் பயன்படுத்த முடியாது.

Chennai Powercut: சென்னையில் இந்த பகுதிகளுக்கு இன்று மின்தடை.. லிஸ்ட் இதோ!

மாதிரி புகைப்படம்

Follow Us On

சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, அம்பத்தூர் சிட்கோ, பொன்னேரி, கிண்டி, நங்கநல்லூர் ஆகிய இடங்களில் நாளை மின்தடை செய்யப்பபடுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாதனங்கள் பயன்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

இதையும் படிங்க : Today’s Top News Headlines: .. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு?..இன்றைய முக்கியச் செய்திகள்..

மின்தடை:

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் செபடம்பர் 20 ஆம் தேதியான இன்று, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அம்பத்தூர் சிட்கோ, பொன்னேரி, கிண்டி, நங்கநல்லூர் ஆகிய இடங்களில் நாளை மின்தடை செய்யப்பபடுகிறது.

எந்தெந்ந ஏரியா தெரியுமா?

அம்பத்தூர் சிட்கோ:

பட்டரவாக்கம், பிள்ளையார் கோயில் தெரு, சிட்கோ எஸ்டேட் வடக்கு கட்டம், பஜனை கோயில், பிராமண தெரு, யாதவா தெரு, குளக்கரை தெரு, கச்சனா குப்பம், ரயில் நிலைய சாலை, பால் டைரி சாலை, டாஸ் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : Today Panchangam September 20 2024: இன்று நல்ல காரியம் செய்யலாமா? பஞ்சாங்கம் சொல்வது என்ன?

பொன்னேரி:

தேவம்பட்டு, அகரம், பள்ளிபாளையம், செகனியாம், ராக்கம்பாளையம், பூங்குளம், கல்லூர் கிராமம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

கிண்டி:

ஆதம்பாக்கம் இபி காலனியின் ஒரு பகுதி, எல்.எச்.நகர் பகுதி, ராதா நகர், வேல் நகர், மோகனபுரி, பிருந்தாவன் நகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

நங்கநல்லூர்:

சோலையப்பன் தெரு, யூனியன் கார்பைடு காலனி, புழுதிவாக்கம் மெயின் ரோடு, தங்கவேலு தெரு, அண்ணாமலை தெரு, வேலாயுதம் தெரு, ராஜகோபால் தெரு, பகத் சிங் தெரு, ஆறுமுகம் தெரு, செங்கலவராயன் தெரு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் எங்கெங்கு?

கோவை:

கோவை மாவட்டத்தில் செல்லப்பம் பாளையம், மூப்பேரியாளையம், தட்டம்புதூர், நாரணபுரம், நகர்ப்புற பாப்பநாயக்கன் பாளையம், புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், சித்தாபுதூர், பழையூர், அலமு நகர், ராமகிருஷ்ண மருத்துவமனை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

திருப்பூர்:

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பன்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்துர், அப்பநாயக்கன்பட்டி, கிமீ புரம், காரணப்பேட்டை, புளியம்பட்டி, ஆறுகுளம், அய்யம்பள்ளம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : Horoscope Today: செப்டம்பர் 20 2024 ராசிபலன்.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்.. யாருக்கு சாதகமாக உள்ளது?

சேலம்:

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், சின்னதிருப்பதி, தும்பிப்பாடி, சாத்தாப்பாடி, உமாரமங்கலம், அரங்கனூர், காடையாம்பட்டி, பஞ்சுகாளிப்பட்டி, பூசாரிப்படி, டேனிஷ்பேட்டை, பெரியபட்டி, வடகம்பட்டி, மரக்கோட்டை, தின்னம்பட்டி, அழகாபுரம், ரெட்டியூர், கோரிமேடு, ஆனைமேடு, ஹஸ்தம்பட்டி, புதூர், மருத்துவக் கல்லூரி, கந்தம்பட்டி, போடிநாயக்கண்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

கிருஷ்ணகிரி:

சிப்காட் போச்சம்பள்ளி, பாரண்டப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவனந்தபுரம், கிரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரபட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

மதுரை:

தேனூர் கடூர், நாமங்குணம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி, கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

Related Stories
ரூ.14,000 கடனை திருப்பி தராததால் ஆத்திரம்.. நண்பனின் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்.. பகீர் சம்பவம்!
TVK Conference : அக்டோபர் 27-ல் தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்.. அறிக்கையில் கூறியிருப்பது என்ன?
Armstrong Murder Case : ”ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு”.. ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் பரபரப்பு கடிதம்!
Today’s Top News Headlines: .. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு?..இன்றைய முக்கியச் செய்திகள்..
Evening Digest 19 September 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
Chennai Powercut: சென்னையில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா தெரியுமா? செக் பண்ணுங்க!
உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version