5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Admk Poster: எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்த சீமான்.. வைரலாகும் அதிமுக போஸ்டர்!

எடப்பாடி பழனிசாமிக்கு, 10 ஆண்டு காலமாக பைசா கூட வாங்காமல் பச்சை மை கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என தெரிவித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை தற்குறி என விமர்சித்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதற்கு அதிமுக சார்பில் கடுமையாக பதிலடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் கண்டனம் தெரிவித்தார்.

Admk Poster: எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்த சீமான்.. வைரலாகும் அதிமுக போஸ்டர்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 30 Sep 2024 17:23 PM

அதிமுக போஸ்டர்: சிவகங்கையில் அதிமுக சார்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பாராட்டு தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பேசு பொருளாக மாறி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் சென்னையில், “தமிழக மீட்போம் தளராது உழைப்போம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, நடிகை குஷ்பூ ,முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தமிழ்நாட்டை முந்திக் கொண்டு வளர்ந்து வருவதாகவும் ஒவ்வொரு மாநிலமும் மக்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.

ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக திமுகவை கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளும் பாஜகவுக்கு எதிரி தான் என பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சித்தார். அதாவது, “சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் என்று தோற்றுப் போன்ற நீங்கள் எனக்கு நேர்மை பற்றி பாடம் எடுக்க வேண்டாம். உங்கள் அருமை பெருமை எல்லாம் எனக்கு தெரியும். கூவத்தூரில் நடந்தது கட்சி பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கான நிகழ்வு அல்ல. அது ஒரு பெட்டிங் முறை தான்.

தவழ்ந்து காலில் விழுந்து பதவியைப் பெற்ற எடப்பாடி பழனிசாமிக்கு, 10 ஆண்டு காலமாக பைசா கூட வாங்காமல் பச்சை மை கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என தெரிவித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை தற்குறி என விமர்சித்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதற்கு அதிமுக சார்பில் கடுமையாக பதிலடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த விவகாரம் குறித்து பற்றி கருத்து தெரிவித்தார்.

அப்போது, “அண்ணாமலை பேசியது ஏற்க முடியாது என்றும், அண்ணாமலை போல பாஜக ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சிக்கு தலைவராக எடப்பாடி பழனிசாமி வரவில்லை. அவர் அடிப்படை உறுப்பினராக இருந்து படிப்படியாக முன்னேறி இந்த இடத்திற்கு வந்துள்ளதாகவும், தமிழகத்தில் தற்போது உள்ள திமுக ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி” எனப் புகழ்ந்தார். மேலும், “தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அண்ணாமலை பேசுவதை நிறுத்த வேண்டும்” என்றும் சீமான் பேசியிருந்தார்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அதனை அதிமுக மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் மணிமாறன் என்பவர் இந்த போஸ்டரை ஒட்டியு உள்ளார். அதில், “அரைவேக்காடு அண்ணாமலைக்கு புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்களின் பெருமைகளை சொல்லியநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்  தெரிவித்துக் கொள்கிறேன்” என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் சமூகவிரதங்களில் வைரலாக பரவி வருகிறது

Latest News