South Chennai Election Results 2024: தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி.. தென் சென்னை மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!

தென் சென்னை தொகுதி தேர்தல் முடிவுகள்: 2024 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனும், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட்டனர். இதில், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி வாகை சூடியுள்ளார்.  திமுகவின் தமிழச்சி 3 லட்சத்து 01 ஆயிரத்து 959 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்தாக, பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 154 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.  சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தமிழச்சி.

South Chennai Election Results 2024: தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி.. தென் சென்னை மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்!

தென் சென்னை மக்களவைத் தேர்தல் முடிவுகள்

Updated On: 

04 Jun 2024 19:21 PM

தென் சென்னையில் திமுக வெற்றி:  2024 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனும், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட்டனர். இதில், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி வாகை சூடியுள்ளார்.  திமுகவின் தமிழச்சி 3 லட்சத்து 01 ஆயிரத்து 959 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்தாக, பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 154 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.  சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தமிழச்சி. அதிமுகவின் ஜெயவர்தன் 99,561 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தை பிடித்தார். நாம் தமிழர் கட்சியின்  தமிழ்செல்வி 45,849 வாக்குகள் பெற்று 4ஆம் இடத்தை பிடித்தார்.

முந்தைய தேர்தல் நிலவரம்:

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, மநீம என மும்முனைப் போட்டி நிலவியது. இருந்தாலும், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் 50 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவர் 5 லட்சத்து 64 ஆயிரத்து 872 வாக்குகள் பெற்ற நிலையில், அதிமுகவின் ஜெயவர்தன் 3 லட்சத்து 02 ஆயிரத்து 649 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். மக்கம் நீதி மய்யம் கட்சியின் ரங்கராஜன் 1,35,465 வாக்குகள் பெற்று கவனம் ஈர்த்தார். 2 லட்சத்து 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தமிழச்சி தங்கபாண்டியன். 2014ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் ஜெவர்தன் 4 லட்சத்து 34 ஆயிரத்து 540 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் 2 லட்சத்து 98 ஆயிரத்து 965 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். பாஜகவின் கனேசன் 2 லட்சத்து 58 ஆயிரத்து 262 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

தென்சென்னை மக்களவை தொகுதி: 

தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளில் ஒன்று தென்சென்னை தொகுதி. இது எந்த அளவுக்கு முக்கியமான தொகுதி என சொல்ல வேண்டுமானால் இங்கு போட்டியிட்டவர்களின் பட்டியலை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முன்னாள் முதலமைச்சர் அண்ணா, இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ஆர் வெங்கட்ராமன், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த முரசொலி மாறன் என தென் சென்னையில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் நீண்டு கொண்டே செல்கிறது. மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பிரபலமான கல்வி நிறுவனங்களை கொண்டுள்ள தென்சென்னை தொகுதியில் படித்தவர்களே அதிகம். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் கணிசமான அளவில் உள்ளனர். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் எண்ணிக்கையில் இவர்கள் இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் இவர்கள் வாக்களிப்பதில்லை என புகாரும் உள்ளது. இந்த தொகுதியில் தொடக்கத்தில் காங்கிரஸ் செல்வாக்கு செலுத்தினாலும் பிற்காலத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகமான தொகுதிகளில் ஒன்றாக மாறியது

வாக்காளர்களின் எண்ணிக்கை:

தென் சென்னை தொகுதியில் மொத்தம் 20 லட்சத்து 70 ஆயிரத்து 816 வாக்காளர்கள் உள்ளனர்.

  1. ஆண் வாக்காளர்கள் – 9,93,590
  2. பெண் வாக்காளர்கள் –  10,13,772
  3. மூன்றாம் பாலினத்தவர் – 454

சட்டப்பேரவை தொகுதிகள்:

தியாகராய நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது தென் சென்னை மக்களவைத் தொகுதி. இத் தொகுதிகள் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உள்ளடங்கியது. அதாவது, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. நாட்டின் முதல் நிதி அமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி, மறைந்த முதலமைச்சர் அண்ணா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் என இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவையை அலங்கரித்தவர்கள் ஏராளம். 1957 முதல் இதுவரை 16 தேர்தல்களை எதிர்கொண்ட தென்சென்னை மக்களவை தொகுதியில் அதிக முறை வெற்றி வாகை சூடியது திமுகதான். அதிகபட்சமாக திமுகவின் டி.ஆர்.பாகூ இந்த தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றார். மேலும், தென் சென்னை தொகுதியில் திமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதி உருவாகி 34 ஆண்டுகளுக்கு பிறகு தான் 1991 மக்களவை தேர்தலில் முதல் முறையாக அதிமுக வெற்றியை பதிவு செய்தது.

 

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்
உருளைக்கிழங்கு இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்..!