Vande Bharat Express: வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள்..தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி! - Tamil News | southern railway announced extra coaches will be added in Tirunelveli - chennai egmore vande bharat express | TV9 Tamil

Vande Bharat Express: வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள்..தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

Published: 

12 Nov 2024 18:53 PM

வந்தே பாரத் ரயில்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கார் சேர், எக்ஸிக்யூட்டிவ் சேர் என இரு வகை இருக்கைகளை கொண்டு இயக்கப்படும் இந்த ரயில் குறைவான பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.

1 / 6தமிழ்நாட்டின்

தமிழ்நாட்டின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது ரயில்கள். மின்சார ரயில் தொடங்கி பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத், அந்தோத்தியா என பல வகைகளில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

2 / 6

குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம், குறைவான பயண நேரம் என அனைத்து வயதினரும் ரயில் செல்வதில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளனர். இதில் வந்தே பாரத் ரயில்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

3 / 6

இந்த வந்தே பாரத் செயல்களில் கார் சேர், எக்ஸிக்யூட்டிவ் சேர் என இரு வகைகளில் கட்டணமானது வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இருவேளைக்கான உணவுகள், காபி அல்லது டீ, தண்ணீர் பாட்டில், நியூஸ் பேப்பர் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

4 / 6

இதனிடையே திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 8 பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 / 6

இந்த வந்தே பாரத் ரயிலானது விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும். திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து மதியம் இரண்டு 50 மணிக்கு இந்த வந்தைபுரத்தில் ஆனது இயக்கப்பட்டு வருகிறது.

6 / 6

விரைவில் அனைத்து விதமான வந்தே பாரத் ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ
காலாவின் காதலி ஹூமாவின் நியூ ஆல்பம்
இந்திய குழந்தைகள் தினம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!