5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali Special Trains: மக்களே ரெடியாகுங்க.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ஊர்களுக்கு சொல்லும் ரயில்களிலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்தனர். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு 120 நாட்கள் இருந்த முன்பதிவு நடைமுறை முறையை 60 நாட்களாக குறைத்து இந்திய ரயில்வே துறை உத்தரவிட்டது. இப்படியான நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Diwali Special Trains: மக்களே ரெடியாகுங்க.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 22 Oct 2024 22:20 PM

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியூரில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணங்களை திட்டமிட்டு வருகிறார்கள். ரயில்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், தனியார் வாகனங்கள் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் முறை அமலில் இருந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ஊர்களுக்கு சொல்லும் ரயில்களிலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்தனர். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு 120 நாட்கள் இருந்த முன்பதிவு நடைமுறை முறையை 60 நாட்களாக குறைத்து இந்திய ரயில்வே துறை உத்தரவிட்டது. இப்படியான நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தாம்பரம் – கன்னியாகுமரி இடையே அக்டோபர் 29, நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12 ஆகிய 3 தினங்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 06049/ 06050 என்ற எண் கொண்ட இந்த ரயிலானது கன்னியாகுமரியில் இருந்து மேற்குறிப்பிட்ட நாட்களில் மதியம் 03.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4:20 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயிலானது நாகர்கோயில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நள்ளிரவு 1.05 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 12:15 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:  Pink Auto: பிங்க் ஆட்டோ திட்டம்.. பெண்களுக்கு ஜாக்பாட்.. ரூ.1 லட்சம் மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டைக்கு அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6  ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு ரயில் ஆனது இயக்கப்பட உள்ளது. மேலும் மறுமார்க்கத்தில் அக்டோபர் 31 மற்றும் நவம்பர்  7 ஆம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:20 மணிக்கு செங்கோட்டைக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு மார்க்கமாக 07:30 க்கு புறப்படும் ரயில் காலை 9:30க்கு சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி,ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: iPhone 15 : ஐபோன் 15-க்கு ரூ.14,000 தள்ளுபடி.. தீபாவளி சேலில் பிளிப்கார்ட் அசத்தல் சலுகை!

இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரிக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்பட்ட உள்ளது. இந்த ரயில் சென்னையிலிருந்து அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 5ஆம் தேதி இயக்கப்படும் என்றும், மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய இரு தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். அதேபோல் கன்னியாகுமரியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோயில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கான முன்பதிவு நாளை (அக்டோபர் 23) காலை 8 மணிக்கு தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரயில் நிலையங்களில் நேரடியாகவோ அல்லது டிக்கெட் முன்பதிவு ஐஆர்சிடிசி செயலி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News