5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Special Trains: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Tiruchendur: முருகனுக்கு 6 படை வீடுகள் இருந்தாலும் சூரனை வதம் செய்தது 2ஆம் படை வீடான திருச்செந்தூரில் தான். இதனால் ஆண்டுதோறும் கந்த சஷ்டி அன்று விழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம். நடப்பாண்டு நவம்பர் 2 ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கிய நிலையில் இதன் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 7 ஆம் தேதியான நாளை நடைபெறுகிறது.

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 06 Nov 2024 08:42 AM
தமிழ் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கான முக்கிய விசேஷ தினங்களில் ஒன்று கந்த சஷ்டி திருவிழா. முருகன் சூரனை வதம் செய்த நிகழ்வாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை ஐப்பசி மாதம் வரும் தீபாவளிக்கு மறுநாள் தொடங்கி ஒரு வார காலம் நடைபெறும்.

1 / 6
முருகனுக்கு 6 படை வீடுகள் இருந்தாலும் சூரனை வதம் செய்தது 2ஆம் படை வீடான திருச்செந்தூரில் தான். இதனால் ஆண்டுதோறும் கந்த சஷ்டி அன்று விழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம்.

2 / 6
நடப்பாண்டு நவம்பர் 2 ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கிய நிலையில் இதன் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 7 ஆம் தேதியான நாளை நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை மற்றும் திருச்செந்தூர் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

3 / 6
தாம்பரத்திலிருந்து இன்று (நவம்பர் 6ஆம்  தேதி) இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06099) செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர், சாத்தூர் வழியாக மறுநாள் காலை 8.30 நெல்லை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 / 6
இதேபோல் திருச்செந்தூரில் இருந்து நவம்பர் 7ஆம் தேதி இரவு 10:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திருச்சி , விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 10:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

5 / 6
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கூடுவார்கள் என்பதால் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் 2 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 7  சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ஏழு பொது பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 / 6
Latest Stories