Special Trains: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! - Tamil News | Southern railway announced special trains for Tiruchendur Sashti festival | TV9 Tamil

Special Trains: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Updated On: 

06 Nov 2024 08:42 AM

Tiruchendur: முருகனுக்கு 6 படை வீடுகள் இருந்தாலும் சூரனை வதம் செய்தது 2ஆம் படை வீடான திருச்செந்தூரில் தான். இதனால் ஆண்டுதோறும் கந்த சஷ்டி அன்று விழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம். நடப்பாண்டு நவம்பர் 2 ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கிய நிலையில் இதன் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 7 ஆம் தேதியான நாளை நடைபெறுகிறது.

1 / 6தமிழ்

தமிழ் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கான முக்கிய விசேஷ தினங்களில் ஒன்று கந்த சஷ்டி திருவிழா. முருகன் சூரனை வதம் செய்த நிகழ்வாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை ஐப்பசி மாதம் வரும் தீபாவளிக்கு மறுநாள் தொடங்கி ஒரு வார காலம் நடைபெறும்.

2 / 6

முருகனுக்கு 6 படை வீடுகள் இருந்தாலும் சூரனை வதம் செய்தது 2ஆம் படை வீடான திருச்செந்தூரில் தான். இதனால் ஆண்டுதோறும் கந்த சஷ்டி அன்று விழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம்.

3 / 6

நடப்பாண்டு நவம்பர் 2 ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கிய நிலையில் இதன் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 7 ஆம் தேதியான நாளை நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை மற்றும் திருச்செந்தூர் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

4 / 6

தாம்பரத்திலிருந்து இன்று (நவம்பர் 6ஆம் தேதி) இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06099) செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர், சாத்தூர் வழியாக மறுநாள் காலை 8.30 நெல்லை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 / 6

இதேபோல் திருச்செந்தூரில் இருந்து நவம்பர் 7ஆம் தேதி இரவு 10:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திருச்சி , விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 10:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

6 / 6

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கூடுவார்கள் என்பதால் இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் 2 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 7 சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ஏழு பொது பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காயில் இருக்கும் மருத்துவ நன்மைகள்..
ஆரஞ்சு ஜூஸை தினமும் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தைகளின் கோபத்தை கட்டுப்படுத்த எளிய வழிகள் இதோ!
இந்தியாவின் மிக நீளமான ரயில் நிலையங்கள் எவை தெரியுமா?