5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Train Service: வெள்ளத்தில் மிதக்கும் விழுப்புரம்.. தென்மாவட்ட ரயில்கள் ரத்து, பாதி வழியில் நிறுத்தம்!

Train Cancelled: சென்னை - நாகர்கோயில் வந்த பாரத் மற்றும் சென்னை - மதுரை இடையேயான தேஜஸ் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தேபாரத் இன்று (டிசம்பர் 2) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Train Service: வெள்ளத்தில் மிதக்கும் விழுப்புரம்.. தென்மாவட்ட ரயில்கள் ரத்து, பாதி வழியில் நிறுத்தம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 02 Dec 2024 10:28 AM

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் அந்த மாவட்டம் முழுவதும் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. இதனிடையே தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பாலம் எண் 452 ல் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பல ரயில்கள் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் மாற்று வழியிலும், சில ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் சென்னைக்குள் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சூழலை கருத்தில் கொண்டு சிரமத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

அதன்படி சென்னை – நாகர்கோயில் வந்த பாரத் மற்றும் சென்னை – மதுரை இடையேயான தேஜஸ் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தேபாரத் இன்று (டிசம்பர் 2) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி இயக்கப்படும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து குருவாயூர் இயக்கப்படும் வகையில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் தாம்பரம் இடையே இயக்கப்படும் மெமு பாசஞ்சர் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Also Read: Sabarimala: சபரிமலையில் வெள்ளம்.. பக்தர்கள் பம்பை ஆற்றில் இறங்க தடை..

நடு வழியில் நிறுத்தப்படும் ரயில்கள்

அதேபோல் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்படுகிறது. அதேபோல் நாகர்கோயில் – தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தோத்யா ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்படும். மேலும் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும். கச்சிக்குடா மற்றும் பாண்டிச்சேரி இடையே இயக்கப்படும் ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மற்றும் பாண்டியன் விரிவறையில் ஆகியவை விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் மெமோ எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்

அதேசமயம் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி, அரக்கோணம் சென்னை கடற்கரை வழியாக சென்னை எழும்பூர் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் நெல்லை எக்ஸ்பிரஸ் வரும் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு எழும்பூர் வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ரயில்களும் திண்டிவனம், மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு செல்லாது என்ற நிலையில் அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய இரு ரயில் நிலையங்களில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: MK Stalin: கொட்டித்தீர்த்த கனமழை.. இன்று விழுப்புரம் விரைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

மேலும் ராமேஸ்வரம் சென்னை எழும்பூர் இடையேயான ரயிலானது காட்பாடி அரக்கோணம் வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்யா கண்டமெண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் வருவதற்கு பதிலாக பெரம்பூரில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் நோக்கி இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். கொல்லம் – சென்னை இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இதே வழித்தடத்தில் சென்னை எழும்பூர் வந்தடையும்.

தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் ரயில் காட்பாடி வழியாக வரும் எனவும், மன்னார்குடியிலிருந்து சென்னை எழும்பூர் வரும் ரயில் இதே வழித்தடத்தில் வரும் எனவும், காரைக்கால் தாம்பரம் இடையே இயக்கப்படும் முறையில் மற்றும் செங்கோட்டை தாம்பரம் இடையே இயக்கங்களும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை காட்பாடி வழியாகவே சென்னை எழும்பூருக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதால் பயணிகள் தங்கள் பயண விவரங்களை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest News