5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரயிலில் வழங்கிய உணவில் வண்டுகள்.. ரூ.50,000 அபராதம்.. அதிரடி நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே!

Vande Bharat Train : சென்னை - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயிலில் நேற்று வழங்கிய உணவில் வண்டுகள் கிடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், உணவு விநியோக ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மேலும், பயணிகள் அளித்த புகார் தொடர்பாக விளக்கமும் அளித்துள்ளது தெற்கு ரயில்வே. 

ரயிலில் வழங்கிய உணவில் வண்டுகள்.. ரூ.50,000 அபராதம்.. அதிரடி நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே!
வந்தே பாரத் ரயில்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 Nov 2024 09:34 AM

சென்னை – நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயிலில் நேற்று வழங்கிய உணவில் வண்டுகள் கிடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், உணவு விநியோக ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மேலும், பயணிகள் அளித்த புகார் தொடர்பாக விளக்கமும் அளித்துள்ளது தெற்கு ரயில்வே.  நெல்லையில் இருந்து சென்னைக்கு நேற்று காலை புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் சாம்பாரில் வண்டுகள் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி தொடங்கியது.

ரயிலில் வழங்கிய உணவில் வண்டுகள்

திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி அடைகிறது. இந்த ரயிலில் உணவுகள், காஃபி, டீ, தண்ணீர் பாட்டில் வழங்கப்படுகிறது.

வாரத்தில் செவ்வாய்கிழமை தவிர்த்து, மற்ற 6 நாட்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு கிளம்பிய வந்தே பாரத் ரயிலில், பயணித்தவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்து.

அதில் சாம்பாரில் வண்டுகள் கிடந்ததாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், ரயில்வே நிர்வாகம் அதை மறுத்துள்ளது. இதுகுறித்து பயணிகள் வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்துள்ளனர்.

Also Read : சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து… சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எந்த ரூட் தெரியுமா?

ரூ.50,000 அபராதம் விதித்த தெற்கு ரயில்வே


இந்த நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதாவது, திருநெல்வேலி – நெல்லை வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் வண்டுகள் கிடந்தது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், உணவு விநியோகம் செய்த ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து உணவு மாதிரியை சேகரித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தை ரயில்வே நிர்வாகம் கண்காணித்து வருவதாகவும் தெற்கு ரயில்வே கூறியது.

Also Read : நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீசார்!

இதற்கு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், “பயணிகள் சுகாதாரம் மற்றும் ஐஆர்சிடிசியின் பொறுப்பற்ற நடவடிக்கை கவலையை எழுப்புகிறது.

இதை நிவர்த்தி செய்யவும், பிரிமியம் ரயில்களில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். உணவின் தரத்தை உறுதி செய்வதில் ரயில்வே நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது மற்றும் பயணிகளின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

Latest News