5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vande Bharat Rail: தமிழகத்துக்கு வருகிறது மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்.. எந்தெந்த ரூட் தெரியுமா?

தமிழகத்தில் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதாவது, சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி வரும் 31ஆம் தேதி தொடங்கி வைக்க உஎள்ளார்.

Vande Bharat Rail: தமிழகத்துக்கு வருகிறது மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்.. எந்தெந்த ரூட் தெரியுமா?
வந்தே பாரத்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 28 Aug 2024 09:29 AM

வந்தே பாரத் ரயில்: இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்துவற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு. அதில் ஒன்று தான் வந்தே பாரத் ரயில். வந்தே பாரத் ரயில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. பயணிகள் பயண நேரத்தை குறைக்கும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. முதலில் நீலம், வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரயில்கள் பின்னர் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில்  ஏற்கனவே ஐந்து வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை – நெல்லை, பெங்களூரு -சென்னை, சென்னை – விஜயவாடா, கோவை – பெங்களூரு, சென்னை – கோவை உள்ளட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

வந்தே பாரத் ரயில்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தமிழகத்தில் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதாவது, சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி வரும் 31ஆம் தேதி தொடங்கி வைக்க உஎள்ளார். இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் மொத்தம் 16 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். இதில் 1 எக்ஸிகியூடிவ் கிளாஸ், மீதமுள்ள பெட்டிகள் ஏ.சி. கேர் காராக இருக்கும் என்ற என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: லண்டன் புறப்பட்டார் அண்ணாமலை… விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்த பாஜக நிர்வாகிகள்!

வந்தே பாரத் ரயில் சேவை நேரம்:

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ஆகிய 7 இடங்களில் நின்று செல்ல இருக்கிறது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் ரயில், தாம்பரத்திதில் 5.23 மணிக்கும், விழுப்புரத்தில் காலை 6.22 மணிக்கும், திருச்சியில் 8.55 மணிக்கும், திண்டுக்கல்லில் காலை 9.53 மணிக்கும், மதுரையில், காலை 10.38 மணிக்கு, கோவில்பட்டியில் காலை 11.35 மணிக்கு, நெல்லையில் பகல் 12.30 மணிக்கும், நாகர்கோவிலுக்கு பகல் 1.50 மணிக்கும் சென்றடைகிறது.  ஒவ்வொரு ரயில் நிலையத்தில் சுமார் 2 முதல் 3   நிமிடங்கள் நின்று செல்கிறது.

மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நெல்லையில் மாலை 3.18 மணிக்கு, கோவில்பட்டியில் 3.58 மணிக்கு, மதுரையில் மாலை 5.03 மணிக்கு, திண்டுக்கல்லில் மாலை 5.48 மணிக்கு, திருச்சி, மாலை 6.45 மணிக்கு, விழுப்புரத்தில் இரவு 8.35 மணிக்கு, தாம்பரத்தில் இரவு 10.28 மணிக்கு, எழும்பூரில் இரவு 11 மணிக்கு வந்தடைகிறது.

அதேபோல, மதுரையில் இருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் காலை 5.15 மணிக்கு புறப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணாராஜபுரம், பெங்களூரு என 7 இடங்களில் நின்று செல்கிறது. மதுரையில் காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், திண்டுக்கல்லில் காலை 5.59 மணிக்கும், திருச்சியில் காலை 6.50 மணிக்கும், கரூரில் காலை 8.08 மணிக்கும், நாமக்கல்லில் காலை 8.32 மணிக்கும், சேலத்தில் காலை 9.15 மணிக்கும், கிருஷ்ணாராஜபுரத்தில் பகல் 12.50 மணிக்கும், பகல் 1.00 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.

Also Read:  சென்னையில் மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து… எந்தெந்த வழிதடத்தில் தெரியுமா?

மறுமார்க்கத்தில், பெங்களூருவில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கிருஷ்ணாராஜபுரத்தில் 1.55 மணிக்கும், சேலத்தில் மாலை 4.50 மணிக்கும், நாமக்கல்லில் 5.38 மணிக்கும், கரூரில் மாலை 5.58 மணிக்கும், திருச்சியில் இரவு 7.20 மணிக்கும், திண்டுக்கல்லில் இரவு 9.08 மணிக்கும், சென்னையில் இரவு 9.45 மணிக்கும் வந்தடைகிறது. ஒவ்வொரு ரயில் நிலையத்தில் 2 முதல் 3 நிமிடங்கள் நின்று செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News