5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இனி இந்த ரயில்கள் தாம்பரத்தில் நிற்காது.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

தாம்பரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் வழித்தடத்தில் கடந்த ஜூலை 23-ம் தேதி முதல் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டாவளங்களில் 220 கிலோ எடையுள்ள சிலிப்பர் கற்களை அகற்றிவிட்டு, புதிதாக 300 கிலோ எடை கொண்ட சிலிப்பர் கற்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிக்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை தண்டவாளங்கள் அகற்றப்பட்டு ஜல்லி கற்கள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இனி இந்த ரயில்கள் தாம்பரத்தில் நிற்காது.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Aug 2024 11:11 AM

தெற்கு ரயில்வே அறிவிப்பு: தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனால் மூன்று நாட்களுக்கு அங்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் கொல்லம் (வண்டி எண்.16101), கன்னியாகுமரி (12633), நாகர்கோவில் (12667), ராமேசுவரம் (16751), தூத்துக்குடி முத்துநகர் (12693), கொல்லம் அனந்தபுரி (20635), திருநெல்வேலி (12631), செங்கோட்டை பொதிகை (12661), காரைக்கால் (16175), மதுரை தேஜஸ் (22671), ஹஸ்ரத் நிஜாமுதீன் – மதுரை சம்பர்க் கிராந்தி (12652) ஆகிய விரைவு ரயில்கள் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் வழித்தடத்தில் கடந்த ஜூலை 23-ம் தேதி முதல் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டாவளங்களில் 220 கிலோ எடையுள்ள சிலிப்பர் கற்களை அகற்றிவிட்டு, புதிதாக 300 கிலோ எடை கொண்ட சிலிப்பர் கற்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிக்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை தண்டவாளங்கள் அகற்றப்பட்டு ஜல்லி கற்கள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏறகனவே பழைய கற்கள் அகற்றப்பட்ட நிலையில் புதிய சிலிப்பர் கற்கற் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்.. சேலம் மருத்துவமனையில் பரபரப்பு..

தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்களுக்காக 4 நடைமேடைகளும், விரைவு ரயிலுக்காக 4 நடைமேடைகளும் உள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் 7 மற்றும் 8 ஆம் நடைமேடையில் நின்று செல்லும். தற்போது கூட்ட நெரிசல் கருத்தில் கொண்டும், மூன்றாவது முணையம் அமைக்கவும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதாவது 9 மற்றும் 10 ஆம் நடைமேடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் சுமார் 63 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 15,16,17 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் கொல்லம் (வண்டி எண்.16101), கன்னியாகுமரி (12633), நாகர்கோவில் (12667), ராமேசுவரம் (16751), தூத்துக்குடி முத்துநகர் (12693), கொல்லம் அனந்தபுரி (20635), திருநெல்வேலி (12631), செங்கோட்டை பொதிகை (12661), காரைக்கால் (16175), மதுரை தேஜஸ் (22671), ஹஸ்ரத் நிஜாமுதீன் – மதுரை சம்பர்க் கிராந்தி (12652) ஆகிய ரயில்கள் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இதேபோல், வெளியூர்களில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வந்தடையும் கொல்லம் (16102), சேலம் (22154), தஞ்சாவூர் உழவன் (16866), நாகர்கோவில் (22658), செங்கோட்டை (20682), காரைக்கால் (16176), மதுரை (22624), முத்துநகர் (12694), குருவாயூர் (16128), மதுரை தேஜஸ் ஆகிய விரைவு ரயில்களும் ஆக. 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாம்பரத்திற்கு பதில் பயணிகள் மாம்பலத்தில் இறங்கிக்கொள்ளலாம் எனவும், தாம்பரத்தில் இருந்து டிக்கெட எடுத்தவர்கள் செங்கல்பட்டில் ஏறிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest News