5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kandha Shasti: கந்த சஷ்டி திருவிழா.. திருச்செந்தூர் செல்லும் பக்தர்களே கவனிங்க!

Tiruchendur: முருகன் சூரனை வதம் செய்த நிகழ்வு திருச்செந்தூரில் தான் நடந்தது. அதுபோல முருகனின் வாகனமாக மயிலும், கொடியில் சேவலும் இடம் பெற்றது இந்த வதத்தின் போது தான் என புராண வரலாறு உள்ளது. அப்படிப்பட்ட முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் விவரிசையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் தினமும் திருச்செந்தூருக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Kandha Shasti: கந்த சஷ்டி திருவிழா.. திருச்செந்தூர் செல்லும் பக்தர்களே கவனிங்க!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 06 Nov 2024 08:36 AM

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக க்யூஆர் குறியீடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ் கடவுளாக அனைவராலும் கொண்டாடப்படும் முருகனுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஒவ்வொரு படைவீடும் முருகனுக்குரிய ஒவ்வொரு சிறப்பையும் கொண்டுள்ளது. அவருக்குரிய பண்டிகைகள் வந்தால் மற்ற கோயில்களை காட்டிலும் சம்பந்தப்பட்ட அறுபடை கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி திருவிழா இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

கந்த சஷ்டி திருவிழா

முருகன் சூரனை வதம் செய்த நிகழ்வு திருச்செந்தூரில் தான் நடந்தது. அதுபோல முருகனின் வாகனமாக மயிலும், கொடியில் சேவலும் இடம் பெற்றது இந்த வதத்தின் போது தான் என புராண வரலாறு உள்ளது. அப்படிப்பட்ட முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் விவரிசையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் தினமும் திருச்செந்தூருக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளை கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Also Read: Kandha Sasti 2024: கந்த சஷ்டி தினத்தில் இந்த தானியத்தை கொண்டு வழிபடுங்கள்! நினைத்த காரியம் நடக்கும்…!

அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. நான்காம் நாளான நேற்று 40 வருடங்களுக்குப் பிறகு கையில் வைரவேலுடன் ஜெயந்திநாதர் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைக் கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்து போயினர். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. நவம்பர் 8 ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக நவம்பர் 6 மற்றும் நவம்பர் 7 ஆக இரண்டு தினங்கள்  திருச்செந்தூர் பகுதி வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் எந்த வாகனமும் திருச்செந்தூர் வழியாக செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள்

இதனிடையே திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுகாக   ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி காவல் உதவி மையங்கள், முதலுதவி சிகிச்சை நிலையங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள் உட்பட பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள், பொது மக்களுக்கான நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள்/வழித்தடங்கள் பற்றிய அத்தியாவசியத் தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத்தில் அறிந்து கொள்ள க்யூ ஆர் கோடு (QR Code) மற்றும் லிங்க் (link) மூலம் பெறும் தகவல் பெறும் வசதியை  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Also Read: Special Trains: திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

இந்த க்யூ ஆர் கோர்டு அல்லது லிங்க் மூலம் அதிலுள்ள இணையதள பக்கதின் மூலம் மேற்படி அத்தியாவசியத் தகவல்களைக் பொதுமக்கள் எளிதாக அறிந்து கொண்டு பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் நிகழ்விற்கு சுமார் 4500 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

18 இடங்களில் மொத்தம் சுமார் 20,000 பேர் தங்கக்கூடிய வகையில் 18 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஆங்காங்கே 4 காவல் உதவி மையங்கள் பக்தர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்களை பூர்த்தி செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 இடங்களில் அவசர மருத்துவ உதவி மையம், தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

 

Latest News