Train Cancelled : சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து… சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எந்த ரூட் தெரியுமா?
மின்சார ரயில்: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை (நவம்பர் 17) மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பல்லாவரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை (நவம்பர் 17) மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பல்லாவரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வார இறுதி என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த சூழலில் தான் பராமரிப்பு பணிகள் நாளை சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் நடைபெறுகிறது. இதனால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் சிரமமின்றி பயணிகள் மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” தாம்பரம் ரயில் நிலையத்தில் 17.11.2024 அன்று காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, நாளை அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (17.11.2024) காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே,… pic.twitter.com/74AxxNDVyM
— MTC Chennai (@MtcChennai) November 16, 2024
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read : விஜய் டிக் செய்ய உள்ள 120 பேர் யார்? த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரைவில் நியமனம்!
நாளை மின்சார ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 17ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் சில ரயில்கள் ரத்து செய்யப்படும் அதே நேரத்தில் பல்லாவரம் வரை சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு காலை 6.15, 6.55, 7.20, 7.45, 8.00, 8.35, 9.38, 10.10, 11.20, மதியம் 12.00, 1.05, 1.30, 2.30, 3.10, 3.45, மாலை 4.10 மணிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
Also Read : வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் கிடந்த வண்டு.. கடுப்பான பயணிகள்!
சிறப்பு ரயில்கள் இயக்கம்
அதே நேரத்தில் பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 7.10, 7.45, 8.10, 8.35, 8.55, 9.35, 10.35, 11.05, 11.35, மதியம் 12.10, 12.55, 1.55, 2.25, 3.20, மாலை 4.00, 4.40, 5.05 மணிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் மின்சார ரயில் சேவை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை கடற்கரை – திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – பட்டாபிராம் ஆகிய வழித்தடங்களில் தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடங்களில் மட்டும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில் சேவை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.