Tiruvannamalai: தீபத்திருவிழா.. திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்.. முழு விபரம்! - Tamil News | special trains announced for tiruvannamalai deepam festival 2024 | TV9 Tamil

Tiruvannamalai: தீபத்திருவிழா.. திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்.. முழு விபரம்!

Updated On: 

12 Dec 2024 10:29 AM

Tiruvannamalai Special Trains: திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு முன்பதிவில்லா ரயில்களும் இயங்குவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

1 / 6திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா உலகப்புகழ் பெற்றது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் அருணாசலேஸ்வரர் கோயிலின் பின்புறம் 2664 அடி உயரத்தில் மகாதீபம் ஏற்றப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இந்தாண்டு மண்சரிவு காரணமாக பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா உலகப்புகழ் பெற்றது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் அருணாசலேஸ்வரர் கோயிலின் பின்புறம் 2664 அடி உயரத்தில் மகாதீபம் ஏற்றப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இந்தாண்டு மண்சரிவு காரணமாக பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

2 / 6

இதனிடையே திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம் முதல் காட்பாடி வரை, திருவண்ணாமலை முதல் விழுப்புரம் வரை, தாம்பரம் முதல் திருவண்ணாமலை வரை இந்த ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 / 6

அதன்படி 06161/06162 என்ற என் கொண்ட ரயில் விழுப்புரத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7:30 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில் 11.45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் வந்து சேரும். இந்த ரயிலானது திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி ரோடு, வேலூர் ஆகிய ரயில் நிலையம் நின்று செல்லும்.

4 / 6

இதே வழித்தடத்தில் காலை 6 மணிக்கு காட்பாடியில் இருந்தும், மறுமார்க்கமாக காலை 11.15 மணிக்கு விழுப்புரத்தில் இருந்தும் சிறப்பு ரயில் செல்ல உள்ளது. 06165/66 என்ற என் கொண்ட ரயிலாவது திருவண்ணாமலை முதல் விழுப்புரம் வரை இயக்கப்படுகிறது.

5 / 6

இது திருவண்ணாமலையில் இருந்து மதியம் 3 மணிக்கும், மறுமார்க்கமாக விழுப்புரத்திலிருந்து 4.40 மணிக்கும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ரயிலானது திருவண்ணாமலையிலிருந்து மாலை 6.20 மணிக்கும், விழுப்புரத்திலிருந்து இரவு 8 மணிக்கும் புறப்படும்.

6 / 6

அதேபோல் தாம்பரத்திலிருந்து காலை 10:45 மணிக்கு புறப்படும் ரயிலானது மதியம் 2:45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதேசமயம் மறு மார்க்கமாக இரவு 10:25 மணிக்கு புறப்படும் ரயிலானது நள்ளிரவு 2.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ரயிலானது செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒல்லியாக இருப்பவர்கள் இந்த காரணங்களால் எடை அதிகரிப்பது கிடையாது..!
கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் படைத்த டாப் 10 சாதனைகள்..!
இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை!
பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!