தீபாவளி பண்டிகைக்கு கங்கையில் நீராட வேண்டுமா? சிறப்பு ரயில் அறிவிப்பு.. விவரங்கள் இதோ..

பொதுவாக தீபாவளி, பொங்கல் மற்றும் பிற பண்டிகை நாட்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். பேருந்து பயணம் என்றால் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் காரணத்தால் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். இதற்காக முன்கூட்டியே ரயிலில் முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று பெருமபாலான மக்கள் கங்கையில் புனித நீராட நினைப்பார்கள்.

தீபாவளி பண்டிகைக்கு கங்கையில் நீராட வேண்டுமா? சிறப்பு ரயில் அறிவிப்பு.. விவரங்கள் இதோ..

கோப்பு புகைப்படம்

Updated On: 

27 Sep 2024 13:15 PM

தீபாவளியன்று கங்கையில் புனித நீராட நினைக்கும் மக்களுக்காக ரயில்வே துறையில் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி சிறப்பு ரயில் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் கொண்டாடப்படுகிறது. இதற்காக தென்னக ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தீபாவளி, பொங்கல் மற்றும் பிற பண்டிகை நாட்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். பேருந்து பயணம் என்றால் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் காரணத்தால் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். இதற்காக முன்கூட்டியே ரயிலில் முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று பெருமபாலான மக்கள் கங்கையில் புனித நீராட நினைப்பார்கள்.

மக்களின் வசதிக்காக ரயில்வே துறையின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி தரப்பில் ராமநாதபுரத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. 9 நாட்கள் கொண்ட இந்த சிறப்பு சுற்றுலா ரெயிலில், மண்டபம், ராமநாதபுரம், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பயணம் மேற்கொள்ள முடியும்.

மேலும் படிக்க: நீலாம்பரி டூ ராஜமாதா… நடிகை ரம்யா கிருஷ்ணன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்

இந்த சுற்றுலா ரயில் வண்டி எண்: 22613 அடுத்த மாதம் 28-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 29-ந் தேதி இரவு 10.10 மணிக்கு பிரயாக்ராஜ் சென்றடைகிறது. 31-ந் தேதி அதிகாலை கங்கையில் புனித நீராடவும், காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, நவம்பர் 1 ஆம் தேதி கயாவுக்கு சென்று புத்தகயாவில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின் 2 ஆம் தேதி விஷ்ணு பத் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு வாரணாசி செல்லும். 3 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பனாரஸ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 5 ஆம் தேதி இரவு 10.10 மணிக்கு மண்டபம் ரயில் நிலையம் வந்தடைகிறது.

இதில் தனி நபர் அறை முதல் 3 பேர் தங்கும் அறை வரை தேர்வு செய்யும் வசதி உள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட இந்த ரயிலில் கால, மதியம் மற்றும் இரவு உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். ஓட்டல்களில் குளிரூட்டப்பட்ட அறைகளில் தங்குவதற்கான ஏற்பாடும். சுற்றிப்பார்ப்பதற்கு குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட பஸ்களும் இந்த பிரயாணத்துக்கான டிக்கெட் கட்டணத்தில் அடங்கும்.

மேலும் படிக்க: வெளிய போறீங்களா மக்களே..! சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எங்கே தெரியுமா?

72 இருக்கைகள் மட்டுமே இருப்பதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும். ரெயில்வே விதிப்படி பயணத்தை ரத்து செய்யும் வசதி உள்ளது. இந்த ரெயிலுக்கு முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி தரப்பில் இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்களுக்கு இது போன்ற சுற்றுலா ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் குரூப் புக்கிங் செய்துக்கொள்ளலாம். தென்னிந்தியவில் ராமநாதபுரம், ஹைதரபாத், கர்நாடகா உள்ளிட்ட இடங்களுக்கும், வட இந்தியாவில் காசி, மதுரா, பத்ரிநாத், கேதர்நாத் உள்ளிட்ட இடங்களுக்கும் சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கு வேறு எங்கும் நிறுத்தங்கள் கிடையாது. ஆன்மீக சுற்றுலா தளங்களுக்கு செல்வதால் அந்தந்த நிறுத்தங்களில் மட்டுமே ரயில்கள் நிறுத்தப்படும்.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?