Special Trains: ஆயுத பூஜைக்கு ஊருக்கு போக ரெடியா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. எந்தெந்த ரூட் தெரியுமா?
சிறப்பு ரயில்கள்: வரும் 11ஆம் தேதி ஆயுத பூஜை, 12ஆம் தேதி விஜயதசமி, 13ஆம் தேதி ஞாயிற்றுகிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரயில் நிலையங்களில் கூடடம் நிரம்பி வழியும். இந்த நிலையல், ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோவை, திருச்சி மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிக முக்கியமான போக்குவரத்து சேவைகளில் ஒன்று ரயில். பொதுவாக ரயில் தான் மக்களுக்கு வசதியாக இருப்பதால் பண்டிகை காலங்களில் பெரும்பாலும் அதிலேயே பயணித்து வருகின்றனர். குறிப்பாக, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ரயில்களில் கூட்டம் அலைமோதும். பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பார்கள். குறிப்பாக சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்து ஊர்களுக்கு செல்வதால் எழும்பூர், சென்டிரல் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். பயணிக்கள் சீரமத்தை தவிர்க்க ரயில்வே நிர்வாகமும் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், வரும் 11ஆம் தேதி ஆயுத பூஜை, 12ஆம் தேதி விஜயதசமி, 13ஆம் தேதி ஞாயிற்றுகிழமை என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
சிறப்பு ரயில்கள்:
இதனால் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரயில் நிலையங்களில் கூடடம் நிரம்பி வழியும். இந்த நிலையல், ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோவை, திருச்சி மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: ரூ.4 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் வருதா? இனி இப்படிதான் கட்டணும்.. மின்வாரியம் அதிரடி!
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் கோவையில் இருந்து நாளை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு வரும் 7ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கத்தில் வரும் 7ஆம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 6 மணிக்கு கோவைக்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வந்தடைகிறது.
மேலும், சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் 9ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் 9ஆம் தேதி இரவு 7 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு வரும் 10ஆம் தேதி காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.
தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்:
மறுமார்க்கத்தில் அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு வரும் 11ஆம் தேதி காலை 11.25 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் நாகர்கோவில், வாலையூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்டிரல் வந்தடையும்.
அதேபோல, வரும் 8ஆம் தேதி சென்டிரல் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, வரும் 8ஆம் தேதி சென்டிரலில் இருந்து 11.45 மணிக்கு புறப்படும் ரயில் வரும் 9ஆம் தேதி பகல் 1.30 மணிக்கு தூத்துக்குடிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் வரும் 9ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில், சென்னைக்கு வரும் 10ஆம் தேதி காலை 8.55 மணிக்கு வந்தடைகிறது.
இந்த ரயில் தூத்துக்குடி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புகோட்டை, மனாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி, பட்டுகோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் வந்தடைகிறது. மேலும், சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு வரும் 11ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 10 ஆம் தேதி வரை வெளுக்கப்போகும் மழை.. எங்கே?
சிறப்பு பேருந்துகள்:
மேலும், ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி, நெல்லை, மதுரை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் 9,10ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து அக்டோபர் 9ஆம் தேதி 225 பேருந்துகளும், 10ஆம் தேதி 880 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.