ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவிற்கு ஜாமின் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ..

சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணுவுக்கு எதிராக சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 7ம் தேதி கைது செய்தனர்.

ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவிற்கு ஜாமின் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ..

கோப்பு புகைப்படம்

Published: 

03 Oct 2024 13:33 PM

மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அசோக் நகர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அசோக் பில்லர் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பத்மஸ்ரீ மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். அப்போது கல்விக்கும் அறிவியலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல், அறிவு சார்ந்த பேச்சு பேசாமல், “முன் ஜென்ம தவறுகளால் தான் தற்போது ஏற்றத் தாழ்வுகளுடன் மாற்றுத்திறனாளியாகவும், வீடில்லாதவராகவும், நோய் நொடிகளுடன் கூடியவராகவும் மனிதனை கடவுள் படைக்கிறார். இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரே மாதிரியாக படைத்திருக்கலாமே?. போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதை பொறுத்து தான் இந்த ஜென்மத்தில் இந்த பிறவி கொடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மகா விஷ்ணு பேசும்போது திடீரென குறுக்கிட்ட ஆசிரியர் ஒருவர் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் முன் ஜென்மம், மறுஜென்மம், கர்மா உள்ளிடவை பற்றி ஏன் பேசுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். இது மிகவும் தவறு என கண்டித்தார். இதனை தொடர்ந்து அந்த ஆசிரியருக்கும் மகாவிஷ்ணுவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக் கூடாது என அந்த ஆசிரியர் திட்டவட்டமாக கூற, அப்படி பேசக்கூடாது என்பதற்கு எங்கு சட்டம் இருக்கிறது என அந்த நபர் மரியாதை குறைவாக அந்த ஆசிரியரை மிரட்டும் வகையில் பேசி கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க:  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்.. ஏ1,ஏ2, ஏ3 குற்றவாளிகள் யார்?

சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணுவுக்கு எதிராக சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 7ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க: சமந்தா விவாகரத்து குறித்து அமைச்சர் கிளப்பிய சர்ச்சை.. கொதிக்கும் ஆந்திரா.. என்ன நடந்தது?

மேலும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூ டியூபில் வெளியிடப்பட்டதாகவும், முழு பேச்சை கேட்காமல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானதாகவும், காவலில் வைத்து போலீசார் விசாரித்த போது முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், தனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது, அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அக்டோபர் 3ஆம் தேதிக்கு அதாவது இன்றைக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இந்த மனு இன்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மகா விஷ்ணுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மகாவிஷ்ணு கைதாகி ஒரு மாதத்திற்கு பின் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!